குழந்தைகளுடன் சீட்டு விளையாடுதல் – ஒரு அப்டேட்

அக்குபிரஷர் பதிவுகள் ரொம்பவும் சீரியஸாக செல்வதாக தோன்றியதால், ஒரு சிறிய ஓய்வுக்காக இந்த பதிவு. முன்பு ஒருமுறை என் குழந்தையுடன் நா சீட்டு விளையாடின கதையை சொல்லி இருந்தேன் (இணைப்பு : http://narayani.nallenthal.in/?p=113) இப்போது அவளுக்கு ஐந்தேகால் வயதாகிறது. அந்த பதிவில் சொல்லியிருந்த விளையாட்டுக்களை இன்னமும் விருப்பத்துடன் விளையாடுகிறாள். இருப்பினும் புது விளையாட்டுக்களை அறிமுகப்படுத்தும் தேவை எங்களுக்கும் இருப்பதால் பின்வரும் இரு விளையாட்டுக்களை சொல்லிக்கொடுத்து அவளுடன் நாங்களும் விளையாடுகிறோம். இவையிரண்டையும் புதியவை என்று கூறுவதைவிட ஏற்கனவே இருக்கும் […]

ஒரு ஊர்ல…

ஒரு ஊர்ல ரெண்டு கிளி இருந்துதாம். ரெண்டும் சாப்பிட்டுட்டே இருந்துதாம். அந்த வயசுல ஒரு நாள்ல முப்பத்தஞ்சு வயசு இருந்ததாம். அந்த கிளி வந்து, எப்ப பாரு லயனையே தேடிப்போகுமாம். வேற எதுவுமே சாப்பிடாதாம். அந்த ரெண்டு கிளியுமே சொல்லிட்டுருந்துதாம், சேர்ந்து ஒரு ரைம்ஸ் சொல்லிட்டேயிருந்துதாம். (கொஞ்ச நேரம் யோசித்து) அது என்ன ரைம்ஸ்ன்னு தெரியல. நாளைக்கு சொல்றேன் ஓகேயா? அந்த ரைம்ஸ் என்னன்னு எனக்கு தெரியல எனக்கு இன்னைக்கு. அதுமாதிரி சொல்லிட்டேயிருந்துதாம். அப்பபார்த்தா, ஒரு லயன் […]

உடல் ஒருபோதும் தவறு செய்யாது – எனது மகள் பிறந்த கதை

என்னைப்பற்றிய ஒரு சிறு அறிமுகம். கணிணி மென்பொருள்துறையில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக பணியாற்றிவருகிறேன். திருமணமாகி விட்டது. இரு பெண் குழந்தைகள் உள்ளனர். முதல் குழந்தைக்கு 5 வயதாகிறது, இரண்டாவது குழந்தை பிறந்து சில வாரங்களாகியுள்ளன. இந்த பதிவு என்னுடைய கடந்த ஒரு வருட கால அனுபவக்குறிப்புகள். இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்வது என்று முடிவெடுத்ததிலிருந்து குழந்தை பிறந்தது வரையிலான நிகழ்ச்சிகளின் சுருக்கமான நாட்குறிப்புகள். இந்த ஒரு வருடத்தில் என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான சிலவற்றை கற்றுக்கொண்டேன் என […]

குழந்தைகளின் திறன்கள்

நேற்று நண்பனொருவனின் அழைப்பின்பேரில் மாற்றுக்கல்வி வழங்கும் ஒரு பள்ளிக்கு சென்றிருந்தேன். முதல் பங்கேற்பு என்பதால் அதுபற்றி நிறைய தகவல்களை அளிக்கமுடியவில்லை. சிலகாலம் பொறுத்து அதைப்பற்றி எழுதுகிறேன். அந்நிகழ்ச்சியில் குழந்தைகளின் திறன் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அவரவருடைய குழந்தைகள்/ தெரிந்த குழந்தைகளின் திறன்களைப் பற்றி பேச்சு சென்றது. அந்நிகழ்ச்சி முடிந்தபின்னரும் அதனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். “குழந்தைகள் திறனற்றவை, அவற்றிக்கு ஒன்றும் தெரியாது, நாம் கற்றுக்கொடுக்கும் பட்சத்தில் மட்டுமே அவை விஷயங்களை கற்றுக்கொள்கின்றன என்று நாம் நினைப்பது மிகவும் தவறு. […]

குழந்தைகளுடன் சீட்டு விளையாடுதல்

எங்கள் மகள் ஹரிணிக்கு (3.5 வயது) ஆண்டு விடுமுறை தொடங்கிய சமயத்தில் அவளுக்கு பொழுதுபோவதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்து சீட்டுக்கட்டு வாங்கலாம் என்று முடிவெடுத்தேன். என் அம்மாவைத் தவிர யாரும் ஆட்சேபிக்கவில்லை. ஒரு கட்டு மாத்திரம் வாங்கி ஹரிணியுடன் விளையாண்டேன் (விளையாண்டு வருகிறேன்). பின்வரும் விளையாட்டுக்களை அவள் மிகவும் ஆர்வமுடன் விளையாடுகிறாள். #1 Pairs நமக்கு மிகவும் அறிமுகமான விளையாட்டுதான். சீட்டுக்களை கவிழ்த்து வைத்துவிட்டு, இரண்டிரண்டாக எடுக்கவேண்டும். இரண்டும் ஒரே எண்ணாக இருந்தால் அதை எடுத்துக்கொள்ளலாம். […]

Create your website at WordPress.com
Get started