சிறிய அளவு ரத்த காயத்திலிருந்து மருந்தின்றி வெளிவருதல்

முந்தைய பகுதியின் தொடர்ச்சி சென்ற பதினேழாம் தேதி (17/01/2016) அன்று என் காலில் ரத்த காயம் ஏற்பட்டதிலிருந்து ஒருவார காலமாக நான் அனுபவித்ததையும் கவனித்ததையும் சுருக்கமாக (!?) எழுதியிருக்கிறேன். பயன்படுகிறதா என்று பாருங்கள். 17 ஜனவரி எங்கள் வீட்டிலுள்ள ஒரு கனத்த மரக்கட்டிலை ஒரு படுக்கையறையிலிருந்து மற்றொன்றுக்கு மாற்ற முயன்றபோது, கட்டிலின் ஒரு பெரிய மரப்பகுதி கால் கட்டைவிரலில் கடும்வேகத்துடன் மோதியது. இடது கால் நகம் அதன் அடிப்பக்க சதையிலிருந்து பாதி பெயர்ந்து ஆனால் காலிலேயே தங்கிவிட்டது. […]

அக்குபிரஷர் அனுபவங்கள் – 7

முந்தைய பகுதியின் தொடர்ச்சி முன்குறிப்பு : தேவையான அளவு ஓய்வு எடுத்துவிட்டதால் இப்பதிவுத் தொடரில் மிச்சம் வைத்தவற்றை முடித்துவிடலாம் என்றிருக்கிறேன். இடையில் ஏற்பட்ட தொய்வுக்கு மன்னிக்கவும். மறுதாக்குதல் இத்தொடரின் முந்தைய பதிவின் இறுதியில் எழுதியிருந்தது போல இனி வாழ்வில் இன்பம் மட்டும்தான் என்று சுற்றிக்கொண்டிருந்தேன். முந்தைய வருடம் சளி மற்றும் மூச்சிரைப்பு தொந்தரவு ஏற்பட்ட அதே மே மாதத்தில் 2015லும் அதே தொந்தரவு ஏற்பட்டது. ஆனால் இம்முறை அந்த தொந்தரவை நன்றாகவே எதிர்கொண்டேன். எந்த மருந்தும் உட்கொள்ளவில்லை. […]

அக்குபிரஷர் அனுபவங்கள் – 6

முந்தைய பகுதியின் தொடர்ச்சி முகாம் அனுபவங்களும், என்னுடைய சில தனிப்பட்ட எண்ணங்களும் அந்த முகாமில் பரோட்டா, பீட்ஸா போன்ற உணவுகளை உண்ணுதல் குறித்து எதுவும் சொல்லவில்லை என்று சென்ற பதிவில் சொல்லியிருந்தேன். அது தவறு 😦 உணவைப் பற்றிய பேச்சு வந்தபோது ஓரிடத்தில், “நாம் வாழுமிடத்தில்தான் நமது உடலுக்கேற்ற, நமது தட்பவெப்ப நிலைக்கேற்ற உணவுகள் விளைகின்றன. ஆகவே பெரும்பாலும் நமது பகுதியில் விளையும் உணவை உண்பதே சிறந்தது” என்று சொன்னார்கள். இதை வைத்து பார்க்கும்போது, பீட்ஸா, பர்கர் […]

அக்குபிரஷர் அனுபவங்கள் – 5

முந்தைய பகுதியின் தொடர்ச்சி கிடைக்கப்பெற்ற பதில்கள் – மற்ற கேள்விகள் 2. சாதாரணமாக ஆரம்பிக்கும், ஆனால் தீவிரமாக ஆகக்கூடிய நோய்களுக்கு இம்மருத்துவமுறையில் என்ன சிகிச்சையளிக்க வேண்டும்? (காய்ச்சல், தலைவலி, ஜலதோஷம்) முதலில் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். காய்ச்சல், சளி, தலைவலி போன்ற எளிமையாக ஆரம்பிக்கும் விஷயங்கள், உணவு உள்ளிட்ட தினசரி வாழ்க்கையில் நாம் செய்யும் காரியங்களால் விளைவதே. இம்மாதிரி எளிய தொந்தரவுகள் தோன்றும்போதே, “இன்றூ அல்லது கடந்த சில நாட்களீல் நாம் செய்த குறிப்பிடத்தக்க வித்தியாசமான விஷயங்கள் […]

அக்குபிரஷர் அனுபவங்கள் – 4

முந்தைய பகுதியின் தொடர்ச்சி கிடைக்கப்பெற்ற பதில்கள் – அவசர சிகிச்சைகள் இந்தப் பதிவில், அந்த தொடுசிகிச்சை முகாமில் எங்களுக்கு கிடைத்த பதில்களையும், அதன்பின் அவற்றின் மீது நாங்களாக விவாதித்து புரிந்துகொண்டவற்றையும் இங்கு பகிர்கிறேன். இப்பதில்கள் பெரும்பாலும் பொது அறிவை ஒட்டியதாகவே இருக்கும். உதாரணத்திற்கு, இப்போது நீங்கள் யாருமற்ற ஒரு காட்டில் தனித்து விடப்படுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். யாரையும் எந்தவிதத்திலும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருப்பதாகவும் கொள்வோம். அந்நிலையில் இப்போது உங்களுக்கு இருக்கும் நோய்கள் அல்லது உடல் […]

அக்குபிரஷர் அனுபவங்கள் – 3

முந்தைய பதிவின் தொடர்ச்சி அறிய உறுதிகொண்டேன் நானும் என் நண்பன் பிரபுவும் தொடுசிகிச்சை முகாமிற்கான தயாரிப்புகளில் இறங்கினோம் என்று சொன்னேனில்லையா? எங்களுடைய மற்ற சில நண்பர்களுடன் இதைப்பற்றி விவாதித்து கேள்விகளை திரட்டிக்கொண்டு அம்முகாமிற்கு செல்லலாமென்று நினைத்தோம். முதலில், எங்களுடைய அடிப்படை புரிதல்களையும், எங்களுக்கு இருக்கும் கேள்விகளையும்  தொகுத்து எங்கள் நண்பர்களுக்கு அனுப்பிவைத்தோம். ஒருவரிடமிருந்தும் எந்த பதிலும் வரவில்லை 😦 ‘வழக்கம் போல′ என்று நீங்களாக சேர்த்து படித்துக்கொண்டாலும் எனக்கு சம்மதமே 🙂 அதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். […]

அக்குபிரஷர் அனுபவங்கள் – 2

முந்தைய பதிவின் தொடர்ச்சி தத்தளிப்பும் மீட்பும் சக்கரை மருத்துவரை பார்க்க காத்திருந்த நேரத்தில் பலவித சிந்தனைகள். கடைசியில் இந்த மருத்துவர் சொல்வதையே பின்பற்றி விடலாம் என்ற முடிவுக்கு வந்தேன். அவரோ சோதனை முடிவுகளை பார்த்து விட்டு “ஒன்று, நீங்கள் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளாமல் இருந்திருக்கவேண்டும், அல்லது அடிக்கடி உணவகங்களில் சாப்பிட்டிருக்க வேண்டும் அல்லது நான் பரிந்துரைத்த உணவுக்கட்டுப்பாட்டை பின்பற்றாது இருந்திருக்க வேண்டும்” என்றார். நான் இது மூன்றையுமே செய்திருந்ததால் பேசாமலிருந்தேன். இந்த அலோபதி சோதனைகளில் இன்னொரு விஷயம். உணவுக்கு […]

அக்குபிரஷர் அனுபவங்கள் – 1

முதல் தாக்குதல் கடந்த 2014ம் ஆண்டின் கோடைக்காலத்தில் வீடு மாற்றியதிலிருந்து எல்லாம் ஆரம்பித்தது. எனக்கு சிறு வயதிலிருந்து மூச்சிரைப்பு நோய் இருந்துவந்தது. அதாவது ஜலதோஷம் வந்தால் சளியாக மாறி மூச்சிரைப்பில் கொண்டுபோய் விடும். எனக்கு பதினைந்து வயதாகும்போது, அலோபதி மருத்துவமுறைகள் பயனளிக்காததால், ஹோமியோபதி மருந்துகளை எடுத்துக்கொள்ள ஆரம்பித்தேன். மூன்று மாதங்களில் முழுமையான தீர்வு கிடைத்தது. அதன்பிறகு பலமுறை சளி பிடித்தாலும் மூச்சிரைப்பு மட்டும் வந்ததேயில்லை. முப்பத்துமூன்றாம் வயதில் ஒருமுறை கழிவறையை அமிலம் வைத்து கழுவி விட முனைந்தபோது […]

Create your website at WordPress.com
Get started