அக்குபிரஷர் அனுபவங்கள் – 2

முந்தைய பதிவின் தொடர்ச்சி

தத்தளிப்பும் மீட்பும்

சக்கரை மருத்துவரை பார்க்க காத்திருந்த நேரத்தில் பலவித சிந்தனைகள். கடைசியில் இந்த மருத்துவர் சொல்வதையே பின்பற்றி விடலாம் என்ற முடிவுக்கு வந்தேன். அவரோ சோதனை முடிவுகளை பார்த்து விட்டு “ஒன்று, நீங்கள் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளாமல் இருந்திருக்கவேண்டும், அல்லது அடிக்கடி உணவகங்களில் சாப்பிட்டிருக்க வேண்டும் அல்லது நான் பரிந்துரைத்த உணவுக்கட்டுப்பாட்டை பின்பற்றாது இருந்திருக்க வேண்டும்” என்றார். நான் இது மூன்றையுமே செய்திருந்ததால் பேசாமலிருந்தேன்.

இந்த அலோபதி சோதனைகளில் இன்னொரு விஷயம். உணவுக்கு முன்னும் பின்னும் எடுக்கும் சோதனைகள் தவிர சமீபகாலங்களில் இன்னுமொரு சோதனையும் எடுக்கிறார்கள். அச்சோதனை சென்ற மூன்று மாதங்களில் உங்கள் சர்க்கரை அளவு, சராசரியாக எவ்வளவு இருந்தது என்பதை சொல்லிவிடுமாம். அந்த சோதனையை செய்து முடிவுகள் தெரிய பொதுவாக ஆறு மணி நேரம் ஆகும். இந்த முறை அம்மருத்துவரின் கிளினிக்கில் அந்த சோதனை ஐந்து நிமிடத்தில் செய்து முடிக்கும் ஒரு கருவியை வைத்து சோதனை முறைய  செய்து கொண்டிருந்தார்கள். அதில் சோதித்து பார்த்தபோது, சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கிறது என்று சொன்னது. இருந்தாலும் அம்மருத்துவர் அதை கண்டுகொள்ளவில்லை. நான் சிறிது வெறுப்புற்றாலும் அவர் சொன்ன மாத்திரைகளை திரும்பவும் வாங்கி எடுத்துக்கொள்ள ஆரம்பித்தேன்.

சில நாட்கள் கழித்து மீண்டும் என் நண்பனுடன் பேசும்போது இந்த விஷயங்களை சொன்னேன். நான் சைக்கிளில் சென்றதுகூட காரணமாக இருக்கலாம் என்றான். 1000மீட்டர் ஓட்டப்பந்தயத்தை ஓடிமுடித்த ஒருவரை உடனே சர்க்கரை சோதனை செய்து பார்த்தால் சர்க்கரை அளவு தாறுமாறாக காட்டும் என்று நானும் ஒருமுறை படித்திருந்தேன். மேலும் ஏன் சர்க்கரை நோய்க்கு அலோபதி மருந்துகளை எடுத்துக்கொள்ளக்கூடாது என்று சில காரணங்களை கூறினான். அது பற்றி சரியான தரவுகளுடன் பின்னர் எழுதுகிறேன். இந்த உரையாடலால் மறடியும் உத்வேகம் பெற்ற நான், அலோபதி மருந்துகளை மறபடியும் நிறுத்திவிட்டு பசிக்கும்போதுமட்டும் சாப்பிடும் வழக்கத்திற்கு வந்தேன். இம்முறை சற்று கடுமையாகவே இருக்க ஆரம்பித்தேன். படபடப்பு சோர்வு ஆகியவை நன்றாகவே சரியாகிவிட்டிருந்தன.

இரண்டு பாராவில் எளிதாக சொல்லிவிட்டாலும், நான் மீண்டும் அலோபதி மருந்துகளை உட்கொள்ளும் முடிவெடுத்தபோதும் மீண்டும் அதை கைவிட்டபோதும் நிறைய குழப்பங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் ஆளானேன். பிறகு திடமான மனத்துடன் மருந்துகளை கைவிடும் முடிவுக்கு வந்தேன். மருந்துகளை உட்கொள்ளாதிருந்தபோது பலருக்கும் அல விளக்கங்கள் அளிக்க வேண்டிய நிர்பந்தம் வந்தது. ஒருபுறம் அக்குபிரஷர் பற்றி போதிய அறிவும் இல்லை. மற்றொருபுறம் உறுதியான நிலைப்பாடுகளுடனும் முன்முடிவுகளுடனும் என்னுடன் விவாதிக்க வருபவர்கள் என ரொம்பவே தடுமாற வேண்டியதாயிற்று.

2015 பெப்ரவரி வாக்கில் நானும் என் அம்மாவும் பிரபல அக்குஹீலரான ஏங்கெல்ஸ் ராஜாவை பார்க்கலாமென்று முடிவு செய்தோம். என் அம்மாவிற்கும் சர்க்கரை நோய் இருந்தது. மேலும் முழங்கால் வலியும், எப்போதாவது மூச்சுத்திணறலும் இருந்து வந்தது. அவர்களுக்கு அலோபதி மருத்துவம் பார்த்துக்கொள்வதில் என்ன சிக்கலென்றால், மேற்கூறிய பிரச்சனைகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு மருத்துவரிடம் செல்ல வேண்டியிருந்தது. முழங்கால் வலிக்கு எடுத்துக்களும் மாத்திரைகளால் வயிறு அவதிக்குள்ளானது. மேலும் ஒருமுறை ஹோட்டலில் உணவு உண்டாலும் வயிற்று வலி வந்து அவதிப்பட்டார்கள். இந்த அக்குஹீலர் மருத்துவத்தில் அனைத்திற்கும் ஒரே ஆளே மருத்துவம் பார்ப்பார் என்பதால் இதை முயற்சி செய்து பார்க்கலாம் என்று கிளம்பினோம்.

ஏங்கல்ஸ் ராஜாவுடனான முதல் சந்திப்பு மிகவும் ஏமாற்றத்தையே அளித்தது. அரை நிமிடம் எங்கள் குறைகளை கேட்டுவிட்டு பதினைந்து நொடிகளுக்குள் நாடி பார்த்துவிட்டு, பத்து நொடிகளுக்குள் சிகிச்சையை முடித்துவிட்டு ‘எல்லாம் சரியாகிவிடும், ஏதேனும் பிரச்சனைகள் தொடர்ந்தால் அடுத்த வாரம் வாருங்கள்’ என்று சொல்லி அனுப்பிவிட்டார். எங்களுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. வெளியில் வந்து அவரது உதவிக்கு இருந்த ஒருவரிடம் விசாரித்தபோது, சிகிச்சை இவ்வாறுதான் கொடுக்கப்படுமென்றும், கட்டாயம் பலனளிக்கும் என்றும் தைரியம் சொன்னார். ஆங்கில மருந்துகளின் தீமையை பற்றி பேசுவார், உணவுக்கட்டுப்பாடு பற்றி  வலியுறுத்துவார், பால் வேண்டாம் என்று சொல்வார் என்று எதிர்பார்த்து சென்ற எனக்கு,  அவர் அதிகபட்சம் ஒரு நிமிடம்தான் எடுத்துக்கொண்டார் என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. எனக்கே இப்படியென்றால் அம்மாவின் நிலையை கேட்கவே வேண்டாம். இருந்தாலும் விடாமல் நாங்களே எங்களுக்கு நம்பிக்கையூட்டிக்கொண்டு திரும்பினோம்.

அக்குபிரஷர் மருத்துவத்தில் இன்னொரு சவால் என்னவென்றால் எந்தவிதமான மருந்துகளும் எதற்கும் உட்கொள்ளக்கூடாது. தலைவலி காய்ச்சல் என்றாலும் சரி. அதேபோல் ஹோமியோபதி ஆயுர்வேதம் ஆகியவற்றில் கொடுக்கப்படும் மருந்துகளும் இதில் அடக்கம். உடலானது தனக்கு ஏற்படும் பிரச்சனைகளை தானே தீர்த்துக்கொள்ளும் என்பதே அக்குபிரஷரின் அடிப்படை. ஏங்கெல்ஸ் ராஜாவோ பேசுவதேயில்லை. மருந்துகளும் உட்கொள்ளக்கூடாது என்னும்போது என் அம்மா போல அக்குபிரஷரில் எந்த அனுபவமோ புரிதலோ இல்லாத ஆட்களுக்கு ஏங்கெல்ஸ் ராஜா போன்ற அக்குஹீலரிடம் மருத்துவம் மேற்கொள்ள தயங்கவே செய்வார்கள். ஆனால் என் அம்மா எப்படியோ இதையே தொடர்வோம் என முடிவெடுத்ததால் வாராவாரம் அவரிடமே செல்ல ஆரம்பித்தோம். ஆச்சரியமாக என் அம்மாவிற்கு சர்க்கரை நோய் தொடர்பான பிரச்சனைகள் குறைய ஆரம்பித்தன. முழங்கால் வலியும், தொடர்ந்து நடந்தால் மட்டுமே வலிக்கும் என்ற அளவிற்கு முன்னேற்றம் கண்டது. காலில் இருந்த வீக்கம் இதர சில பிரச்சனைகள் மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவை முழுதும் கட்டுக்குள் வந்தது. கொஞ்சம் நிம்மதியடைந்தோம்.

சில வாரங்கள் கழித்து என் அம்மாவிற்கு உடல் சோர்வு தலைசுற்றல் ஆகியவை திரும்பவும் வந்தன. என் அக்கா வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்த போது சும்மா இருக்காமல் அருகிலிருந்த லேப்பில் சக்கரை சோதனை செய்து பார்த்தார். சர்க்கரை அளவு நானூறை எட்டியிருந்தது. பயந்துபோய் மறுபடியும் ஏங்கெல்ஸிடம் சென்றோம். அவர் “சோதனை செஞ்சு என்ன ஆகப்போகுது? தலைசுற்றல், உடற் சோர்வுக்கு சிகிச்சையளிக்கிறேன். மற்றபடி சர்க்கரை நோய்க்கான சோதனை முடிவுகளை பார்த்து எனக்கு ஒன்றும் புரியப்போவதில்லை. ஆகவே எனாகு அதை காட்டவேண்டாம்” என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டார். அதன்பின் சர்க்கரை நோய்க்கான எந்த சோதனையும் பண்ணப்போவதில்லை என்ற உறுதியை .ஏற்கொண்டோம்.

இதனிடையில் கம்பம் அக்காடமியுடன் வானகம் அமைப்பினர் நடத்தும் ஐந்து நாள் அக்குபிரஷர் முகாம் 2015 ஏப்ரல் மாதம் நடைபெற்றது. அதில் நானும் எனக்கு அலோபதி மருந்துகள் வேண்டம் என புத்தி கூறிய அந்த நண்பனும் பங்கேற்பதென்று முடிவு செய்து அதற்கான தயாரிப்புகளில் இறங்கினோம். அதில் பங்கேற்க முடிவெடுத்ததற்கான முக்கிய காரணம், அக்குபிரஷர் குறித்து போதிய அறிவை பெற வேண்டுமென்பதே. மோத வருபவர்களை சமாளிக்க வேண்டுமே?

– தொடரும்.

(அடுத்த பகுதி)

Advertisements

அக்குபிரஷர் அனுபவங்கள் – 1

முதல் தாக்குதல்

கடந்த 2014ம் ஆண்டின் கோடைக்காலத்தில் வீடு மாற்றியதிலிருந்து எல்லாம் ஆரம்பித்தது. எனக்கு சிறு வயதிலிருந்து மூச்சிரைப்பு நோய் இருந்துவந்தது. அதாவது ஜலதோஷம் வந்தால் சளியாக மாறி மூச்சிரைப்பில் கொண்டுபோய் விடும். எனக்கு பதினைந்து வயதாகும்போது, அலோபதி மருத்துவமுறைகள் பயனளிக்காததால், ஹோமியோபதி மருந்துகளை எடுத்துக்கொள்ள ஆரம்பித்தேன். மூன்று மாதங்களில் முழுமையான தீர்வு கிடைத்தது. அதன்பிறகு பலமுறை சளி பிடித்தாலும் மூச்சிரைப்பு மட்டும் வந்ததேயில்லை. முப்பத்துமூன்றாம் வயதில் ஒருமுறை கழிவறையை அமிலம் வைத்து கழுவி விட முனைந்தபோது அந்த நெடி தாங்காமல் மறுபடியும் சிறு அளவில் இரைப்பு வந்தது. பின் அந்த வீட்டிலிருந்து அடுத்த வீட்டிற்கு குடி பெயரும்போது,  தூசியில் உழன்றதால், திரும்பவும் சளிபிடித்து, நன்றாகவே மூச்சிரைப்பு கிளம்பியது. அலோபதி மருந்துகள் எடுத்தும் சரியாகவில்லை. அருகிலிருந்த மருத்துவர், காச நோய்க்கான மாண்டாக்ஸ் சோதனை செய்துபார்த்து “உங்களுக்கு காசநோய் இருப்பதுபோல் தோன்றுகிறது” என்று சொல்லி நுரையீரல் மருத்துவர் ஒருவரை கலந்தாலோசிக்குமாறு சொன்னார்.

அதன்படி நானும் சென்னையில் உள்ள ஒரு புகழ்பெற்ற மருத்துவமனையில், நுரையீரல் மருத்துவரை (Pulmanologist) சந்தித்தேன். அவர் முதலிலேயே இது காசநோய் இல்லை என்று தீர்மானமாக சொன்னார். ஒவ்வாமை காரணமாக வரும் பிரச்சனை இது என்றார். ஒவ்வாமையின் அளவை அறிந்துகொள்ள சில சோதனைகளை மட்டும் செய்துவிட்டு மருந்துகள் கொடுத்தார். மேலும் ரத்தத்தில் சக்கரையின் அளவை பார்க்குமாறும் சொன்னார். அதை சோதிக்க சென்றதிலிருந்து எனக்கு சோதனை ஆரம்பித்தது. நானூறுக்கும் மேல் சக்கரையின் அளவு இருந்ததால், ‘இதனால்தான் சளி தீரவில்லை. முதலில் சென்று ஒரு சக்கரை மருத்துவரை பார்த்து மருந்துகளை எடுத்துக்கொள்’ என்றார். பின்னர் என் அம்மாவுக்கு பார்த்துக்கொண்டிருந்த சக்கரை மருத்துவரிடமே நானும் சென்று காண்பித்தேன். அவர் ‘இதெல்லாம் ஒன்றும் பிரச்சனையில்லை. இந்த மருந்துகளை எடுத்துக்கொள், நான் சொல்வதுபோல் உணவுக்கட்டுப்பாட்டை மேற்கொள், எளிதாக “கட்டுக்குள்” கொண்டு வந்துவிடலாம்’ என்றார். தீர்க்கமுடியும் என்று சொல்லவில்லை! சுமார் ஒரு மாதம் கழித்து வந்து பாருங்கள் என்றும் சொன்னார்.

நானும் அவர் சொன்னபடி கடும் உணவுக்கட்டுப்பாட்டோடு மருந்துகளும் எடுத்துக்கொண்டு வந்தேன். ஒரு மாதம் கழித்து சக்கரை சோதனை (காலை சாப்பாட்டிற்கு முன்னும், பின்னும்) முடிவுகளை எடுத்துக்கொண்டு அவரிடம் சென்றேன். சக்கரை நல்ல கட்டுக்குள் வந்திருந்தது. சளியும் மூச்சிரைப்பும்கூட குறைந்திருந்தது.  அவரும் பாராட்டிவிட்டு ‘இதே மருந்துகளை இன்னொரு மாதம் எடுத்துக்கொண்டுவிட்டு மறுபடியும் வந்து காட்டுங்கள்’ என்று சொல்லி அனுப்பிவைத்தார்.

அந்த சமயத்தில், எங்களுக்கு இரண்டாம் குழந்தை பிறந்ததையொட்டி அலைச்சல், வெளியில் உணவகங்களில் சாப்பிடுதல் என்று இருக்க நேரிட்டது. இதற்கு நடுவில் என் இரு நண்பர்களுடன் அலோபதி மருத்துவ முறைகளை குறித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த உரையாடல் மூலம் நிறைய புரிதல்கள் கிடைத்தன. அலோபதி மருத்துவத்தின் போதாமைகள் குறித்து நிறைய விவாதித்தோம். என் நண்பர்கள் இருவரும், அலோபதி மாத்திரைகள் எடுத்து கொள்வதால் எந்த பயனுமில்லை என்று பலமுறை வலியுறுத்தினர். பசி வந்தபின்னரே சாப்பிடுவது, பால், பாலிலிருந்து பெறப்பட்ட வெண்ணைய் முதலிய பொருட்கள், இவை இரண்டிலிருந்தும் தயாரிக்கப்பட்ட பொருட்கள் (இனிப்புகள் முதலியன) ஆகியவற்றை தவிர்த்தல் இவற்றின் மூலமாகவே சக்கரை நோய் என்று அலோபதிக்காரர்கள் அழைக்கும் தொல்லையிலிருந்து விடுபடலாம் என்று கூறினார்கள்.

எனக்கும் கொஞ்சம் ஆர்வம் வந்தது. ஆகவே ‘இவற்றை பின்பற்றி பார்க்கலாம். அதே சமயம், அந்த சக்கரை மருத்துவரிடமும் ஒரு மாதம் கழித்து பரிசோதனைக்கு செல்லலாம். சர்க்கரை அளவு கட்டுக்குள் வரவில்லையென்றால், அவர் தரும் மாத்திரைகளை மீண்டும் எடுத்துக்கொள்வது’ என்ற முடிவுக்கு வந்தேன். ஆனால் அது அவ்வளவு எளிதானதாக இல்லை. பசி வரும்வரை காத்திருப்பது என்பது (இன்றுவரை) முழுக்க சாத்தியமாகவில்லை. முதல் சிறிது நாட்கள் வயிறு காலியாக இருந்தாலே அதை பசி என நினைத்துக்கொண்டு உணவை உட்கொண்டுவிடுவேன். பிறகுதான் காலியான வயிறு என்பதும் பசிக்கும் வயிறு என்பதும் இருவேறு விஷயங்கள் என்று புரிந்தது. ஆனாலும் எல்லா நாட்களிலும் பசித்தபின் தான் சாப்பிட்டேனா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

ஆனால் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்தது. சக்கரை நோயின் அறிகுறிகளாக எனக்கு சாப்பிட்டவுடன் எனக்கு கடுமையான உடற்சோர்வு ஏற்படும். ஒரு படபடப்பும் இருக்கும். இவையிரண்டும், நான் அலோபதி மருந்துகளை எடுத்துக்கொண்டும், உணவுக்கட்டுப்பாட்டை அனுசரித்து வந்தபோதும் முழுமையாக இல்லாமலிருந்தது. அந்த விடுதலை உணர்வு நான் இவ்வாறு மாத்திரைகள் எடுத்துக்கொள்ளாமல் (முடிந்தவரை) பசித்து உணவு உட்கொண்டபோதும் கிடைத்தது. இதற்கிடையில் அந்த சக்கரை மருத்துவர் சொன்ன ஒரு மாதக்கெடுவும் முடிவுக்கு வந்தது. சக்கரைக்கான பரிசோதனையையும் மருத்துவரின் ஆலோசனையையும் அவர் மருத்துவமனையிலேயே செய்துகொள்ளலாமென்று அங்கே சென்றேன். நான் அவ்வப்போது குறுகிய தூர சைக்கிள் பயணங்கள் மேற்கொண்டிருந்த காலம் அது. மிகுந்த தன்னம்பிக்கையோடு சைக்கிளை எடுத்துக்கொண்டு பதினேழு கிலோமீட்டர் தொலைவிலிருந்த அவரது மருத்துவமனைக்கு காலை வேளையில் சென்றேன்.

சாப்பிடுவதற்கு முன்னுள்ள சோதனைக்கான ரத்த மாதிரியை கொடுத்து விட்டு அருகிலிருந்த உணவகத்தில் இட்லி வடை தோசை ஆகியவற்றை உண்டேன். பின்னர் சாப்பிட்டபின் இரண்டு மணி நேரம் கழித்து கொடுக்க வேண்டிய ரத்த மாதிரிக்கு காத்திருக்கும் வேளையில், சும்மா இருக்காமல், அருகிலிருந்த ஒரு கோவிலுக்கு (2கிமீ தூரம், போகவர 4கிமீ) சென்று வந்தேன். பின்னர் இரு சோதனைகளின் முடிவுகளையும் கிடைக்கப்பெற்றேன். இடி விழுந்தது. சென்றமுறை 110 என கட்டுக்குள் வந்த சக்கரையின் அளவு இம்முறை 197ஐ எட்டியிருந்தது. பேயறைந்த முகத்துடன் மருத்துவரை சந்திக்க காத்திருந்தேன்.

– தொடரும்

(அடுத்த பகுதி)

சாலை விபத்துகளை தடுப்பது எப்படி? சில எண்ணங்கள்

பின்வரும் கட்டுரை சில மாதங்கள் முன்பு திரு என்.முருகன் (ஐ.ஏ.எஸ் ஓய்வு) அவர்களால் துக்ளக்கில் எழுதப்பட்டது. அது குறித்து சில எண்ணங்களை துக்ளக்கிற்கு நான் எழுதி அனுப்பினேன். ஆனால் அவர்கள் பிரசுரிக்கவில்லை 😦

பின்வரும் இணைப்பில் திரு. முருகன் அவர்களின் கட்டுரையை இலவசமாக படிக்கலாம்.

http://thuglak.com/thuglak/main.php?x=archive/22_07_2015/murugan_22_07_2015.php

அதுகுறித்த என் எண்ணங்கள் பின்வருமாறு.

திரு. முருகன் அவர்களின் கட்டுரையில் உள்ள பெரும்பாலான விஷயங்களுடன் நானும் உடன்படுகிறேன். அவர் தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள அதிகாலை பயண அனுபவங்களை நானும் பெற்றுள்ளேன். ஆட்டோக்களின் பின்புறமோ, (மாநகர) பேருந்துகளின் முன்புறமோ பயணிப்பதில்லை என்பதை விதியாகவே பின்பற்றிவருகிறேன். நடைபயணிகளைப் பற்றிய அவரது எண்ணங்களுடன் மட்டும் சிறிது முரண்படுகிறேன். சாலைகளில் நடப்போர் என்ன மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் என்று பார்க்கலாம். 

தனி நடைபாதை 
சென்னையில் பெரும்பாலும் நடப்போருக்கான தனி நடைபாதைகள் எங்குமே ஒழுங்காக இருப்பதில்லை. தமிழகத்தின் மற்ற நகரங்களிலோ கேட்கவே வேண்டாம். அரசே மின்மாற்றிகள், மின் கம்பங்கள் என்று பல்வேறு விஷயங்களை அமைப்பதற்கு இருக்கும் தனி நடைபாதைகளை பயன்படுத்திக்கொள்கிறது. நடைபாதை வியாபாரிகள் விட்டுத்தள்ளுங்கள். சாலையோரத்தில் உள்ள கடைகளே நடைபாதையை பாதியோ அல்லது முழுமையாகவோ ஆக்கிரமித்து தங்கள் பொருட்களை அடுக்கிவைத்து விடுகின்றன. பெரிய கடைகளும் அவற்றின் முன்னுள்ள நடைபாதையை வாடிக்கையாளரின் கார் பார்க்கிங் உள்ளிட்ட தேவைகளுக்கு ஆக்கிரமித்து விடுகின்றன. இந்த நிலையில் நடப்பவர்கள், தெருவில் இறங்கும் சூழ்நிலையே ஏற்படுகிறது. மழைக்காலங்களில் இன்னமும் மோசம். தெருவின் ஓரங்கள் நீரால் நிறைந்திருக்க, மக்கள் துணிந்து சாலையின் நடுப்பகுதி வரை சமயங்களில் வந்து நடந்து செல்லவேண்டியிருக்கிறது. 

தனி ஸிக்னல்கள் 
இவையும் பெரும்பாலும் இருப்பதில்லை அல்லது வேலை செய்வதில்லை அல்லது வாகன ஓட்டிகளால் மதிக்கப்படுவதில்லை. சாலையின் ஒரு சந்திப்பில் இடப்புறமாக திரும்ப விழையும் வாகன ஓட்டிகள் எல்லா இடப்புற திருப்பங்களும் free left என்ற நினைப்பிலேயே ஓட்டி செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் சாலையை கடந்து கொண்டிருப்போர் எளிதாக ஆபத்திற்குள்ளாகின்றனர். சாலையை குறுக்காக கடப்போருக்காக காத்து நிற்பதற்கும் எவருக்கும் பொறுமையில்லை. இவ்வளவு வேகமாக செல்பவர்கள் போய் என்ன இந்தியாவை முன்னேற்றும் காரியங்களிலா ஈடுபடப்போகிறார்கள்? அலுவலகத்திற்கு சென்று அரட்டை அடிப்பார்கள் அல்லது வீட்டிற்கு சென்று டிவி பார்க்கப்போகிறார்கள். இதற்கு எதற்கு இத்தனை வேகம்? 

ஸீப்ரா க்ராஸிங் 
மக்கள் சாலையை கடக்க குறிக்கப்பட்டிருக்கும் இந்த ஸீப்ரா க்ராஸிங் கோடுகளுக்கும் ஸிக்னல்களின் நிலைமையே. இருப்பதில்லை, அல்லது பாதி அழிந்திருக்கும் அல்லது வாகன ஓட்டிகளுக்கு இவற்றைப்பற்றி எந்த கவலையுமில்லை. ஸிக்னல்களில் நிற்கும் வாகன ஓட்டிகளுக்கு, நிறுத்தக்கோட்டை தாண்டி, இந்த ஸீப்ரா க்ராஸிங் கோட்டையும் தாண்டி நிறுத்துவதை குறித்து எந்த நினைப்பும் இல்லை. நிறுத்தக்கோட்டிற்கு முன்னமே வண்டியை நிறுத்தியதற்கு பலமுறை பலரால் நான் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறேன். சமீபத்தில்கூட ஒரு கார் ஓட்டுநர் என்மேல் இடிக்கும் வகையில் பக்கவாட்டில் தன் காரை நிறுத்தி திட்டினார். போக்குவரத்து காவலர்களே, நெரிசலை சமாளிக்கும் பொருட்டு வாகனங்களை இந்த கோடுகளை தாண்டி வந்து நிற்கசொல்கின்றனர். 

இவ்வாறு இருக்கையில் சாலையை கடப்பவர்கள், நடந்து செல்பவர்கள் ஒழுங்கை கடைபிடிப்பார்கள் என்று எவ்வாறு எதிர்பார்ப்பது? திரு.முருகன் கூறியுள்ளது போலவே, வெளிநாடுகளில் இத்தகைய நிலைகள் இருப்பதில்லை என்பது மிகவும் உண்மை. மற்றுமொரு விஷயம், அங்குள்ள சாலைவிதிகள் நடப்போருக்கு சாதகமான வகையில் அமைந்திருப்பது. மேலும் வாகனம் ஓட்டுவோரும், சாலையில் நடந்து செல்பவரை மதித்து செல்வது. ஸிக்னல்களே இல்லாத சாலை சந்திப்புகள் அங்கே நிறையவே உண்டு. அந்த இடங்களில் ஸீப்ரா க்ராஸிங்கை நடந்து கடப்பவர்களுக்கு வாகனஓட்டிகள் தம் காரை நிறுத்தி பொறுமையாக காத்திருந்து (ஒரு புன்னகையுடன்) வழிவிடுவது மிகவும் சகஜம்! சாலையை கடப்போரும் புன்னகையுடன் அந்த வாகனஓட்டிக்கு கையசைத்து நன்றி தெரிவித்து செல்வதும் சகஜம்!! இத்தனைக்கும் கார்களில் செல்வோர் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் நாடுகள் அவை. 

ஆனால் நடந்து செல்வோர் அதிகமாக இருக்கும் நம்நாட்டில் பொதுவாக, வாகனங்களில் வருவோருக்கு நடந்து செல்பவர்கள் வழிவிடவேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படியோ வழக்கமாக இருக்கிறது. ஒருவேளை கார்களை நம்நாட்டில் முதலில் பயன்படுத்திய ஆங்கிலேயர்களையும் இந்திய செல்வந்தர்களையும் பார்த்து பயந்து வழிவிட்டு பழகியது நமது மரபணுக்களிலேயே படிந்துவிட்டதோ என்னவோ? அதே போல் காரில் ஏறியதும், தனக்கு அனைவரும் வழிவிட்டு செல்லவேண்டும் என்ற எண்ணமும் தானாகவே வந்துசேர்கிறது. திரு. முருகன் அவர்களின் அந்த காலை நேர அனுபவத்தில்கூட, சாலையை கடந்த அந்த பெரியவர் மற்றும் அவரின் குடும்பத்திற்கு காத்திருந்து வழிவிட்டு சென்றதற்கு 30 நொடிகளுக்கு மேல் ஆகியிருக்காது. ஆனால் அவரே பொறுமையின்றி அந்த காலை வேளையில் ஹாரனை உபயோகித்து அவர்களை அவசரப்படுத்தியதை பார்க்கும்போது, மற்ற பாமர மக்களை ஒன்றும் சொல்வதற்கில்லை. அந்த பெரியவருக்கோ அல்லது அவரின் குடும்பத்தில் யாருக்கேனுமோ நடப்பதில் சிரமமிருக்கலாம். அல்லது அக்காலை வேளையில் பார்வை சரியாக தெரியாமலிருக்கலாம். நமது மாநிலத்தின் தெருவிளக்குகளின் நிலமை நமக்கு தெரிந்ததுதானே? சாலையில் பச்சை விளக்கு எரிந்தவுடன், சாலையை இன்னமும் கடந்து கொண்டிருப்போரை ஹார்னை விடாமல் அடித்து விலகச்செய்பவருக்கும், ஒரு கால்நடையை சப்தமெழுப்பி விரட்டுவோருக்கும் பெரிய வித்தியாசத்தை காணமுடியாது. இத்தனைக்கும், அவ்வாறு கடப்போரில் பெண்கள், வயதானவர்கள், நடக்க சிரமப்படுபவர்கள் என அனைவரும் இருப்பதை நாம் காணமுடியும். ஆனால் அவர்களை நாம் பொருட்படுத்துவதில்லை. 

நகர எல்லைக்குள் high beam எனப்படும் உச்ச ஒளியளவில் வாகனத்தின் விளக்குகளை உபயோகிப்பது கூடாது. போக்குவரத்து விதிகளின்படி கூட இது தவறு என்று நினைக்கிறேன். இவ்வாறு இருக்க அதிகமாக ஒளியுமிழும் ஹாலஜன் விளக்குகளை பயன்படுத்துவோர் நாளுக்கு நாள் பெருகிவருகின்றனர். போக்குவரத்து காவலர்களும் இதை கண்டுகொள்வதில்லை. ஸிக்னல்களில் நிற்கும்போது விளக்குகளை அணைத்து வைப்பது நமக்கும் நல்லது. முன்னால் நிற்பவரின் கண்களையும் நாம் சோர்வடைய செய்யாமல் இருப்போம். ஆனால் பெரும்பாலோர் இதை செய்வதில்லை. தெரிவதேயில்லை என்பதுதான் உண்மை. 

அப்படியானால், சாலையை கடப்போர், அல்லது நடந்து செல்வோரிடம் தவறுகளே இல்லையா? நிச்சயம் இருக்கிறது. ஒரு இருபது பேர் சேர்ந்தால் எந்த ஸிக்னலையும் மீறி சாலையை கடந்துவிடலாம். ஜனநாயகத்தின் வலிமை! சாலை தடுப்புகளை அநாயசமாக தாண்டி செல்வதும் நடக்கும். திரைப்படங்களில் இதே காரியத்தை கதாநாயகன் செய்யும்போது எழுப்பப்படும் எழுச்சிமிகு பிண்ணனி இசையை மனதில் தானாகவே இசைத்துக்கொண்டால் தைரியமும், லாகவமும் தானாக வரப்போகிறது. ஃபேஸ்புக்கிலோ, ட்விட்டரிலோ, வாட்ஸாப்பிலோ சமுதாய புரட்சியை உண்டுபண்ணும்போது கால்கள் நடந்துகொண்டிருப்பதோ, சாலையை கடந்து கொண்டிருப்பதோ ஒன்றும் பெரியவிஷயமில்லையே? (பெரும்பாலும்) திருட்டுத்தனமாக பதிவுசெய்யப்பட்ட திரைப்பாடல்கள் காதில் ஒலித்துக்கொண்டிருக்கும்போதோ, அல்லது உற்ற தோழனோ, தோழியோ பேசிக்கொண்டிருக்கும்போதோ பின்வரும் வாகனங்கள் ஓசையெழுப்பியும் காத்திருப்பது நியாயம்தானே? 

இவற்றையெல்லாம்விட முக்கியமான விஷயம் இரவில் தெருவிளக்குகளில்லாத சாலையை கடப்போர். இம்மாதிரி சாலைகளில், இருபுறமும் வாகனங்கள் வரும்போது அவற்றின் ஒளி காரணமாக அவ்விரு வாகன ஓட்டிகளுக்கும் தான் தெரியமாட்டோம் என்பதை இவர்கள் அறிவதில்லை! வாகனஓட்டிகள் இவர்களை மிகவும் சமீபிக்கும்போதுதான் கவனிப்பது சாத்தியம். அதன் பிறகு ப்ரேக் பிடித்து மோதாமல் தவிர்த்து, தொடர்ந்து வரும் வாகனங்களிலிருந்து தன்னை காத்துக்கொள்வதெல்லாம் வாகனஓட்டிகளுக்கு பெரிய சாதனை. “நான்தான் கையை ஆட்டி எச்சரித்துக்கொண்டே வந்தேனே” என்ற வசனத்தை நடைபயணிகளிடம் கேட்டுப்பெறுவது கூடுதல் நகைச்சுவை. 

மொத்ததில் திரு.முருகன் அவர்கள் குறிப்பிட்டுள்ளதுபோல மக்களின் சமூக குணாதிசயங்கள் மாறும்வரை இப்பிரச்சனைகள் தீரப்போவதில்லை. ஒருவரை ஒரே நாளில் அடுத்தடுத்து வெவ்வேறு வகையில் பயணிக்க வைத்து (நடப்பது, பேருந்தி செல்வது, இருசக்கர மற்றும் நாற்சக்கர வாகனங்களில் செல்வது) கவனித்து பார்த்தால், ஒவ்வொரு முறையிலும், மற்ற முறையை பயன்படுத்தும் பயணிகள் குறித்து கடுப்படிப்பதை நிச்சயம் காணலாம். “எப்படி போறான் பாரு” என்ற வாக்கியம் எல்லா நிலைகளிலும் எழுப்பப்படும். நானுமே சொல்லியிருக்கிறேன்! 

புத்தாண்டு சபதங்கள்

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த வலைப்பூவையும் வலைதளத்தையும் ஆரம்பித்து ஏறத்தாழ இரண்டரை வருடங்களாகின்றன. அதிகபட்சமாக கடந்த இரு வருடங்களிலும் தலா ஏழு பதிவுகளை எழுதியுள்ளேன். இந்த வருடத்தில் இதை அதிகரிக்கவேண்டுமென்பதே என் முதல் குறிக்கோள். சராசரியாக வாரத்திற்கு ஒரு பதிவு என்ற வகையில் எழுதவேண்டுமென நினைக்கிறேன். ஏழிலிருந்து ஐம்பத்தியிரண்டு என்பது கொஞ்சம் அதீதம்தான். அதெல்லாம் பார்த்தால் நான் எப்போது ஜெயமோகனாவது? ஆகவே முடிந்தவரை முயற்சிக்கிறேன்.

அடுத்ததாக புத்தகங்கள். நிறைய புத்தகங்களை வாங்கி வீட்டில் அடுக்கிவைத்திருக்கிறேன். ஆனால் படிப்பது என்னவோ மிகவும் குறைவுதான். சென்ற வருட இறுதியில் GoodReads இணையதளத்தின் புண்ணியத்தில் (reading challenge) நான்கு புத்தகங்களை படித்து முடித்தேன். இருப்பினும், நிறைய புத்தகங்கள் படிக்க வேண்டியிருக்கிறது. இவை தவிர என் தொழில் சார்ந்த புத்தகங்களையும் படிக்க வேண்டும். இப்போது உடனடியாக மனதில் தோன்றுபவற்றை கீழே கொடுத்துள்ளேன்.

உப்புவேலி – ராய் மாக்ஸம் (தமிழில் சிறில் அலெக்ஸ்)
இனி நான் உறங்கட்டும் – பி.கெ. பாலகிருஷ்ணன் (தமிழில் ஆ. மாதவன்) (இதை போன ஜனவரியில் சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கினேன். இன்னமும் படித்துக்கொண்டிருக்கிறேன்)
இரண்டாம் இடம் ( இனி நான் உறங்கட்டும் முடித்த பிறகுதான் இதை படிக்கவேண்டும் என்ற தீர்மானத்தில் இருப்பதால் இன்னமும் ஆரம்பிக்கவில்லை)
சத்தியசோதனை – காந்தி (பலகாலமாக படித்துக்கொண்டிருக்கும் புத்தகங்களில் இதுவும் ஒன்று. இந்த வருடமாவது முடிக்கவேண்டும்)
இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் – ஜெயமோகன்

மறுபடியும் படிக்க நினைப்பவை
நீலம், வண்ணக்கடல், விஷ்ணுபுரம் – ஜெயமோகன்

தொழில் சார்ந்த புத்தகங்கள்

Code complete – Steve McConnell (இரண்டு வருடங்களாக படிக்க முயன்று கொண்டிருக்கிறேன், இன்னமும் முடிக்கவில்லை)
Patterns of Enterprise application architecture – Martin Fowler
Refactoring – Martin Fowler (இன்னமும் வாங்கவில்லை. மேலே உள்ள இரு புத்தகங்களையும் முடித்தபின் வாங்கி படிக்கவேண்டும்)

இவை தவிர WCF தொடர்பாக வாங்கிவைத்த ஒரு புத்தகத்தையும், கிண்டில் கருவியில் சேர்த்து வைத்துள்ள சில புத்தகங்களையும் படிக்கவேண்டும். எவ்வளவு படிக்கிறேன் என்று பார்க்கலாம்.

புத்தகங்கள் தவிர Data science தொடர்பாக படிக்க முயன்றுகொண்டிருக்கிறேன். அதற்கு கணிதம் தொடர்பான புத்த்கங்களையும், Machine learning தொடர்பான புத்தகங்களையும் படிக்கவேண்டுமென்றிருப்பதால், இந்த வருடம் எனக்கு படிக்கும் வருடமாகவே இருக்கும் என்று தோன்றுகிறது.

சைக்கிள் பயணங்கள்

நான் வசிக்கும் சென்னையை சுற்றியுள்ள ஏரிகளுக்கு சைக்கிளிலேயே பயணித்து, புகைப்படங்கள் எடுத்து பதிவுகள் எழுதி அப்புகைப்படங்களை வெளியிடவேண்டும் என்று போன வருடம் நினைத்திருந்தேன். மாதம் ஒரு ஏரி என்று யோசித்து வைத்திருக்கிறேன். மழை பெய்து நீர் நிறைந்துள்ள இந்நிலையில் பயணம் நன்றாகவே இருக்குமென தோன்றுகிறது. வேடந்தாங்கலுக்கு ஒருமுறை குடும்பத்துடன் (காரில்தான்) சென்றுவரவேண்டும்.

சென்றவருடத்திலிருந்து என் உடலிலோ அல்லது மனதிலோ தோன்றும் பிரச்சனைகளுக்கு அக்குபிரஷர் மூலமாகத்தான் சிகிச்சை பெற்றுவருகிறேன். கம்பம் அக்காடமி நடத்தும் ஐந்துநாள் தொடுசிகிச்சை முகாமிற்கும் ஒருமுறை சென்றுவந்தேன். அடுத்த கட்டமாக அதில் ஒரு வருட டிப்ளமோ படிப்பை இந்த வருடம் ஜூன் மாதம் முதல் தொடங்கவுள்ளேன்.

கடைசியாக உணவில் கட்டுப்பாட்டை கொண்டுவரவேண்டுமென முடிவு செய்திருக்கிறேன். இதைப்பற்றி தனியாக ஒருபதிவு எழுதுகிறேன்.

இதெல்லாம் பார்த்துவிட்டு ஏதோ நான் நினைத்தால் முடிப்பவன் என்று எண்ணிவிடாதீர்கள். (என்னைப்பற்றி தெரிந்தவர்கள் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள்). பொதுவாக நான் எதையாவது செய்யவேண்டுமென்றால், அதை செய்துவிட்டு மற்றவர்களிடம் சொல்பவனல்ல. மற்றவர்களிடம் முதலில் சொல்லிவிட்டு, ஐயோ சொல்லிவிட்டோமே, அதற்காகவாவது எதையாவது செய்யவேண்டும் என்று செயலில் இறங்க முயற்சிப்பவன். இந்த பதிவும் அந்த வகையானதொரு முயற்சியே.

எல்லாம் நல்லபடியாக நடக்கவேண்டும் என….. என்னை எல்லோரும் வாழ்த்துங்கள்.

சாலை விபத்துகளை தடுப்பது எப்படி? சில எண்ணங்கள்

பின்வரும் கட்டுரை சில மாதங்கள் முன்பு திரு என்.முருகன் (ஐ.ஏ.எஸ் ஓய்வு) அவர்களால் துக்ளக்கில் எழுதப்பட்டது. அது குறித்து சில எண்ணங்களை துக்ளக்கிற்கு நான் எழுதி அனுப்பினேன். ஆனால் அவர்கள் பிரசுரிக்கவில்லை

பின்வரும் இணைப்பில் திரு. முருகன் அவர்களின் கட்டுரையை இலவசமாக படிக்கலாம்.

http://thuglak.com/thuglak/main.php?x=archive/22_07_2015/murugan_22_07_2015.php

அதுகுறித்த என் எண்ணங்கள் பின்வருமாறு.

திரு. முருகன் அவர்களின் கட்டுரையில் உள்ள பெரும்பாலான விஷயங்களுடன் நானும் உடன்படுகிறேன். அவர் தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள அதிகாலை பயண அனுபவங்களை நானும் பெற்றுள்ளேன். ஆட்டோக்களின் பின்புறமோ, (மாநகர) பேருந்துகளின் முன்புறமோ பயணிப்பதில்லை என்பதை விதியாகவே பின்பற்றிவருகிறேன். நடைபயணிகளைப் பற்றிய அவரது எண்ணங்களுடன் மட்டும் சிறிது முரண்படுகிறேன். சாலைகளில் நடப்போர் என்ன மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் என்று பார்க்கலாம்.

தனி நடைபாதை
சென்னையில் பெரும்பாலும் நடப்போருக்கான தனி நடைபாதைகள் எங்குமே ஒழுங்காக இருப்பதில்லை. தமிழகத்தின் மற்ற நகரங்களிலோ கேட்கவே வேண்டாம். அரசே மின்மாற்றிகள், மின் கம்பங்கள் என்று பல்வேறு விஷயங்களை அமைப்பதற்கு இருக்கும் தனி நடைபாதைகளை பயன்படுத்திக்கொள்கிறது. நடைபாதை வியாபாரிகள் விட்டுத்தள்ளுங்கள். சாலையோரத்தில் உள்ள கடைகளே நடைபாதையை பாதியோ அல்லது முழுமையாகவோ ஆக்கிரமித்து தங்கள் பொருட்களை அடுக்கிவைத்து விடுகின்றன. பெரிய கடைகளும் அவற்றின் முன்னுள்ள நடைபாதையை வாடிக்கையாளரின் கார் பார்க்கிங் உள்ளிட்ட தேவைகளுக்கு ஆக்கிரமித்து விடுகின்றன. இந்த நிலையில் நடப்பவர்கள், தெருவில் இறங்கும் சூழ்நிலையே ஏற்படுகிறது. மழைக்காலங்களில் இன்னமும் மோசம். தெருவின் ஓரங்கள் நீரால் நிறைந்திருக்க, மக்கள் துணிந்து சாலையின் நடுப்பகுதி வரை சமயங்களில் வந்து நடந்து செல்லவேண்டியிருக்கிறது.

தனி ஸிக்னல்கள்�
இவையும் பெரும்பாலும் இருப்பதில்லை அல்லது வேலை செய்வதில்லை அல்லது வாகன ஓட்டிகளால் மதிக்கப்படுவதில்லை. சாலையின் ஒரு சந்திப்பில் இடப்புறமாக திரும்ப விழையும் வாகன ஓட்டிகள் எல்லா இடப்புற திருப்பங்களும் free left என்ற நினைப்பிலேயே ஓட்டி செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் சாலையை கடந்து கொண்டிருப்போர் எளிதாக ஆபத்திற்குள்ளாகின்றனர். சாலையை குறுக்காக கடப்போருக்காக காத்து நிற்பதற்கும் எவருக்கும் பொறுமையில்லை. இவ்வளவு வேகமாக செல்பவர்கள் போய் என்ன இந்தியாவை முன்னேற்றும் காரியங்களிலா ஈடுபடப்போகிறார்கள்? அலுவலகத்திற்கு சென்று அரட்டை அடிப்பார்கள் அல்லது வீட்டிற்கு சென்று டிவி பார்க்கப்போகிறார்கள். இதற்கு எதற்கு இத்தனை வேகம்?

ஸீப்ரா க்ராஸிங்�
மக்கள் சாலையை கடக்க குறிக்கப்பட்டிருக்கும் இந்த ஸீப்ரா க்ராஸிங் கோடுகளுக்கும் ஸிக்னல்களின் நிலைமையே. இருப்பதில்லை, அல்லது பாதி அழிந்திருக்கும் அல்லது வாகன ஓட்டிகளுக்கு இவற்றைப்பற்றி எந்த கவலையுமில்லை. ஸிக்னல்களில் நிற்கும் வாகன ஓட்டிகளுக்கு, நிறுத்தக்கோட்டை தாண்டி, இந்த ஸீப்ரா க்ராஸிங் கோட்டையும் தாண்டி நிறுத்துவதை குறித்து எந்த நினைப்பும் இல்லை. நிறுத்தக்கோட்டிற்கு முன்னமே வண்டியை நிறுத்தியதற்கு பலமுறை பலரால் நான் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறேன். சமீபத்தில்கூட ஒரு கார் ஓட்டுநர் என்மேல் இடிக்கும் வகையில் பக்கவாட்டில் தன் காரை நிறுத்தி திட்டினார். போக்குவரத்து காவலர்களே, நெரிசலை சமாளிக்கும் பொருட்டு வாகனங்களை இந்த கோடுகளை தாண்டி வந்து நிற்கசொல்கின்றனர்.

இவ்வாறு இருக்கையில் சாலையை கடப்பவர்கள், நடந்து செல்பவர்கள் ஒழுங்கை கடைபிடிப்பார்கள் என்று எவ்வாறு எதிர்பார்ப்பது? திரு.முருகன் கூறியுள்ளது போலவே, வெளிநாடுகளில் இத்தகைய நிலைகள் இருப்பதில்லை என்பது மிகவும் உண்மை. மற்றுமொரு விஷயம், அங்குள்ள சாலைவிதிகள் நடப்போருக்கு சாதகமான வகையில் அமைந்திருப்பது. மேலும் வாகனம் ஓட்டுவோரும், சாலையில் நடந்து செல்பவரை மதித்து செல்வது. ஸிக்னல்களே இல்லாத சாலை சந்திப்புகள் அங்கே நிறையவே உண்டு. அந்த இடங்களில் ஸீப்ரா க்ராஸிங்கை நடந்து கடப்பவர்களுக்கு வாகனஓட்டிகள் தம் காரை நிறுத்தி பொறுமையாக காத்திருந்து (ஒரு புன்னகையுடன்) வழிவிடுவது மிகவும் சகஜம்! சாலையை கடப்போரும் புன்னகையுடன் அந்த வாகனஓட்டிக்கு கையசைத்து நன்றி தெரிவித்து செல்வதும் சகஜம்!! இத்தனைக்கும் கார்களில் செல்வோர் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் நாடுகள் அவை.

ஆனால் நடந்து செல்வோர் அதிகமாக இருக்கும் நம்நாட்டில் பொதுவாக, வாகனங்களில் வருவோருக்கு நடந்து செல்பவர்கள் வழிவிடவேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படியோ வழக்கமாக இருக்கிறது. ஒருவேளை கார்களை நம்நாட்டில் முதலில் பயன்படுத்திய ஆங்கிலேயர்களையும் இந்திய செல்வந்தர்களையும் பார்த்து பயந்து வழிவிட்டு பழகியது நமது மரபணுக்களிலேயே படிந்துவிட்டதோ என்னவோ? அதே போல் காரில் ஏறியதும், தனக்கு அனைவரும் வழிவிட்டு செல்லவேண்டும் என்ற எண்ணமும் தானாகவே வந்துசேர்கிறது. திரு. முருகன் அவர்களின் அந்த காலை நேர அனுபவத்தில்கூட, சாலையை கடந்த அந்த பெரியவர் மற்றும் அவரின் குடும்பத்திற்கு காத்திருந்து வழிவிட்டு சென்றதற்கு 30 நொடிகளுக்கு மேல் ஆகியிருக்காது. ஆனால் அவரே பொறுமையின்றி அந்த காலை வேளையில் ஹாரனை உபயோகித்து அவர்களை அவசரப்படுத்தியதை பார்க்கும்போது, மற்ற பாமர மக்களை ஒன்றும் சொல்வதற்கில்லை. அந்த பெரியவருக்கோ அல்லது அவரின் குடும்பத்தில் யாருக்கேனுமோ நடப்பதில் சிரமமிருக்கலாம். அல்லது அக்காலை வேளையில் பார்வை சரியாக தெரியாமலிருக்கலாம். நமது மாநிலத்தின் தெருவிளக்குகளின் நிலமை நமக்கு தெரிந்ததுதானே? சாலையில் பச்சை விளக்கு எரிந்தவுடன், சாலையை இன்னமும் கடந்து கொண்டிருப்போரை ஹார்னை விடாமல் அடித்து விலகச்செய்பவருக்கும், ஒரு கால்நடையை சப்தமெழுப்பி விரட்டுவோருக்கும் பெரிய வித்தியாசத்தை காணமுடியாது. இத்தனைக்கும், அவ்வாறு கடப்போரில் பெண்கள், வயதானவர்கள், நடக்க சிரமப்படுபவர்கள் என அனைவரும் இருப்பதை நாம் காணமுடியும். ஆனால் அவர்களை நாம் பொருட்படுத்துவதில்லை.

நகர எல்லைக்குள் high beam எனப்படும் உச்ச ஒளியளவில் வாகனத்தின் விளக்குகளை உபயோகிப்பது கூடாது. போக்குவரத்து விதிகளின்படி கூட இது தவறு என்று நினைக்கிறேன். இவ்வாறு இருக்க அதிகமாக ஒளியுமிழும் ஹாலஜன் விளக்குகளை பயன்படுத்துவோர் நாளுக்கு நாள் பெருகிவருகின்றனர். போக்குவரத்து காவலர்களும் இதை கண்டுகொள்வதில்லை. ஸிக்னல்களில் நிற்கும்போது விளக்குகளை அணைத்து வைப்பது நமக்கும் நல்லது. முன்னால் நிற்பவரின் கண்களையும் நாம் சோர்வடைய செய்யாமல் இருப்போம். ஆனால் பெரும்பாலோர் இதை செய்வதில்லை. தெரிவதேயில்லை என்பதுதான் உண்மை.

அப்படியானால், சாலையை கடப்போர், அல்லது நடந்து செல்வோரிடம் தவறுகளே இல்லையா? நிச்சயம் இருக்கிறது. ஒரு இருபது பேர் சேர்ந்தால் எந்த ஸிக்னலையும் மீறி சாலையை கடந்துவிடலாம். ஜனநாயகத்தின் வலிமை! சாலை தடுப்புகளை அநாயசமாக தாண்டி செல்வதும் நடக்கும். திரைப்படங்களில் இதே காரியத்தை கதாநாயகன் செய்யும்போது எழுப்பப்படும் எழுச்சிமிகு பிண்ணனி இசையை மனதில் தானாகவே இசைத்துக்கொண்டால் தைரியமும், லாகவமும் தானாக வரப்போகிறது. ஃபேஸ்புக்கிலோ, ட்விட்டரிலோ, வாட்ஸாப்பிலோ சமுதாய புரட்சியை உண்டுபண்ணும்போது கால்கள் நடந்துகொண்டிருப்பதோ, சாலையை கடந்து கொண்டிருப்பதோ ஒன்றும் பெரியவிஷயமில்லையே? (பெரும்பாலும்) திருட்டுத்தனமாக பதிவுசெய்யப்பட்ட திரைப்பாடல்கள் காதில் ஒலித்துக்கொண்டிருக்கும்போதோ, அல்லது உற்ற தோழனோ, தோழியோ பேசிக்கொண்டிருக்கும்போதோ பின்வரும் வாகனங்கள் ஓசையெழுப்பியும் காத்திருப்பது நியாயம்தானே?

இவற்றையெல்லாம்விட முக்கியமான விஷயம் இரவில் தெருவிளக்குகளில்லாத சாலையை கடப்போர். இம்மாதிரி சாலைகளில், இருபுறமும் வாகனங்கள் வரும்போது அவற்றின் ஒளி காரணமாக அவ்விரு வாகன ஓட்டிகளுக்கும் தான் தெரியமாட்டோம் என்பதை இவர்கள் அறிவதில்லை! வாகனஓட்டிகள் இவர்களை மிகவும் சமீபிக்கும்போதுதான் கவனிப்பது சாத்தியம். அதன் பிறகு ப்ரேக் பிடித்து மோதாமல் தவிர்த்து, தொடர்ந்து வரும் வாகனங்களிலிருந்து தன்னை காத்துக்கொள்வதெல்லாம் வாகனஓட்டிகளுக்கு பெரிய சாதனை. “நான்தான் கையை ஆட்டி எச்சரித்துக்கொண்டே வந்தேனே” என்ற வசனத்தை நடைபயணிகளிடம் கேட்டுப்பெறுவது கூடுதல் நகைச்சுவை.

மொத்ததில் திரு.முருகன் அவர்கள் குறிப்பிட்டுள்ளதுபோல மக்களின் சமூக குணாதிசயங்கள் மாறும்வரை இப்பிரச்சனைகள் தீரப்போவதில்லை. ஒருவரை ஒரே நாளில் அடுத்தடுத்து வெவ்வேறு வகையில் பயணிக்க வைத்து (நடப்பது, பேருந்தி செல்வது, இருசக்கர மற்றும் நாற்சக்கர வாகனங்களில் செல்வது) கவனித்து பார்த்தால், ஒவ்வொரு முறையிலும், மற்ற முறையை பயன்படுத்தும் பயணிகள் குறித்து கடுப்படிப்பதை நிச்சயம் காணலாம். “எப்படி போறான் பாரு” என்ற வாக்கியம் எல்லா நிலைகளிலும் எழுப்பப்படும். நானுமே சொல்லியிருக்கிறேன்!

Intolerance in India

சமீபத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் தனது இணையதளத்தில் சகிப்பின்மை விவகாரம் குறித்து எழுதிய கட்டுரையின் ஆங்கில மொழியாக்கம் எனக்கு வாட்ஸ்ஸாப்பில் வந்தது. மொழிபெயர்ப்பு செய்தவர் யாரென்று தெரியவில்லை. அவருக்கு நன்றி.

An Eye opener
B. Jeyamohan is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil

This is the translation of his article: 
“Intolerance” 

I learnt the meaning of “Power” when I visited Delhi in 1994 to receive my Sanskriti Samman award and stayed for two days in India International Centre. I did have some familiarities with Information and culture ministries. However, IIC is the place where “Power” is served on a gold plate. 

IIC is located in a peaceful and luxurious bungalow with lawns, high class food and drinks, quietly moving waiters, the butter English spoken without the upper lip moving, lipsticked women gracefully adjusting their hair, the elegant welcome given to the inner circle members with signs and hugs without making any noise! 

I have stayed in many star hotels later. But I have never seen anywhere the luxury and comfort of IIC. 

IIC was established and funded by the Indian government as an independent body to promote arts and free thinking. If my memory serves me right, Dr. Karan Singh was also its head. I saw him in that evening. 

I saw every intellectual that I had known through my reading of English language magazines. U R Ananthamurthy was staying there for almost four years almost as a permanent fixture. Girish Karnad was staying for a few days. Writers, journalists and thinkers such as Pritish Nandi, Makarant Parajpe, Shobha De were seen everywhere in the Centre. 

It was true that I was overwhelmed that day. Arunmozhi (my wife) ran to Girish Karnad on spotting him and was thrilled to introduce herself to him. I was told that Nayantara Sehgal used to come there on daily basis to have a drink. I saw her that day too. I realized that the two other individuals who were given the award along with me, Rajdeep Sardesai and Anamika Haksar were regulars there. 

They wear rough Kolkata kurtas and Kolhapuri chappals. Wear small glasses. Women in pure white hair and khadi saris. One of them, they said, was Kapila Vatsyayan. They said, Pupul Jayakar will also come. Wherever you turn, there were literary talks and art discussions. 

That pomp kind of unnerved me. The ultra high intellectualism seen there somewhat alienated me. Venkat Swaminathan, who saw me the next day, immediately recognised my sense of discomfort. He said, “Hey, three fourth of this crowd is just a perfect horde of crows (the Tamil equivalent of psychophants). The snobs that make their living are draw their power by licking the boots of power centres. Most of them are mere power brokers. At best you may find one or two artists who you will really respect. And they can’t bear this atmosphere for too long and will just run away. 

But these are the people who decide what is culture for this country. They can talk about every thing in the world for one hour in colourful English with the right number of jargons. But on the 61st minute, the colour will start fading. Actually they don’t know any thing in the real sense. Almost all are like the little boxes we find in attics which held hing a long time back”, said Venkat Swaminathan. 

Everyone will have four or five trusts in the name of Service Organizations or Cultural Organizations. They will be flying from one conference to the other. Once given accommodation in a government bungalow, they can never be removed from there. In Delhi alone this crowd has illegally occupied about 5,000 bungalows. There is another Power Centre similar to this in Delhi which is called the JNU. It is the same story there too. 

Can’t the government get rid of them?”, I asked. He said, “normally governments do not think in that line. Because this crowd has stuck itself from the time of Nehru. They support each other. Even if some IAS officials try, they will fall at the right feet and escape”. 

“There is one more thing added to it” said Venkat Swaminathan. “Not only were these people just parasites, they also derive great power by showing themselves as progressive leftists. Did you notice it?”. I said “Yes” with an amazement. 

They are known throughout the world through the numerous seminars they attend. They are highly networked. Journalists around the world seek their opinion on whatever happens in India. They are the people who gave a leftist mask to the Congress Government. If you look at it that way, the amount spent on them is quite low”, he said. They are the trolls sitting on the head of India and nobody can do anything to them. They decide what is art or culture or thought of India. 

I have often been to IIC with my Malayalam journalist friends. For them, this is the place to pick rumours and convert them in to news. They know there are no secrets as the day wears out and the spirits rise higher and higher in the head. 

But I can only pity those people who engage in to political debates based on the supposedly rare gems of wisdoms dished out by these “intellectuals” through the middle pages of English newspapers. These intellectuals never actually know the real politics. They just shout on the basis of the superfluous knowledge and stand points, with the prime space enable by the network. That’s all. 

Long time back when I wrote about this Circle, I had mentioned that Barkha Dutt is none but a power broker, my own friends fought with me for degrading a “progressive fighter”. Fortunately for me, within a few days, the brokering she did with Tata leaked out through the Nira Radia tapes. (Incidentally, what happened to that case, does any body know?). But even those stark revelations could not bring down Barkha Dutt from her exalted pedestal even for a month. That is the kind of power they have. 

But now, for the first time in the history of independent India someone has dared to touch this power circle. Warnings were circulated at the lower level for the last about 6 months. Last week the Culture Ministry decided to send a notice to them. This, perhaps, is the reason for these intellectuals to suddenly flare up against “intolerance”. 

For example, painter Jatin Das, father of actress Nandita Das is occupying a large government bungalow at one of the premium locations in Delhi free of cost for many years. Government has sent an eviction notice to him. This is the real reason for Nandita Das strongly speaking about intolerance in television channels and writing in English newspapers (all diligently carried by the network). 

Modi, I think he has touched a wrong nerve. These elements are too powerful. They can destroy India through the media worldwide. They can create a picture that rivers of blood are flowing in India. They can make businessmen around the world to halt. They can wreck the tourism industry. The truth is there is no other power centre like this in India. Tolerating them is unavoidable for India. And Modi’s intolerance of them is extremely dangerous – not only for him but for the country itself. “

ஒரு ஊர்ல…

ஒரு ஊர்ல ரெண்டு கிளி இருந்துதாம். ரெண்டும் சாப்பிட்டுட்டே இருந்துதாம். அந்த வயசுல ஒரு நாள்ல முப்பத்தஞ்சு வயசு இருந்ததாம். அந்த கிளி வந்து, எப்ப பாரு லயனையே தேடிப்போகுமாம். வேற எதுவுமே சாப்பிடாதாம். அந்த ரெண்டு கிளியுமே சொல்லிட்டுருந்துதாம், சேர்ந்து ஒரு ரைம்ஸ் சொல்லிட்டேயிருந்துதாம். (கொஞ்ச நேரம் யோசித்து) அது என்ன ரைம்ஸ்ன்னு தெரியல. நாளைக்கு சொல்றேன் ஓகேயா? அந்த ரைம்ஸ் என்னன்னு எனக்கு தெரியல எனக்கு இன்னைக்கு. அதுமாதிரி சொல்லிட்டேயிருந்துதாம். அப்பபார்த்தா, ஒரு லயன் வந்து… லயனுக்கு ஓடவே தெரியாதுல்ல? (இது எப்ப?) சும்மா அந்த முட்டாள் லயன் என்ன பண்ணிட்டு இருந்தது தெரியுமா? (கைகளை ஆட்டி) இப்படி இப்படி இப்படின்னு நெளிச்சுட்டு இருந்துதாம். நீங்க கூட இப்படி இப்படி பண்ணுறீங்க அப்படி, அப்படிங்குறதாம். அப்புறம், கிளிக்கு என்ன.. முட்டைதானே புடிக்கும் (அப்படியா?) அந்த முட்டைய எடுத்து சாப்பிட்டுட்டேயிருந்துதாம். டீர், மான் எல்லாம் வந்து முட்டிக்கிட்டேயிருந்துதாம். இது என்ன இந்த இத முட்டவே முடியலன்னவுடனே, வீசி முட்டினுதாம். அப்பவும் முட்ட முடியலயாம். என்னடா இதுன்னு வேற மரம (மரத்தை) முட்ட போனுதாம். ஆஆஆங்,, இதுதான் முட்டமுடியுதுன்னு அப்படியே அந்த ஒரு கிளி இறந்தவுடனே இன்னொரு கிளிக்கு முட்டாள் புடிச்சுடும். அந்த… ஒரு லயன் சொன்னேன்ல, அந்த லயன என்ன பண்ணுது தெரியுமா? எப்ப பாரு காட்டுலதான் இருக்கும், ஆனா அது ஸூவுல வந்துதாம். நம்மோட ஃப்ரெண்ட் இருக்கேன்னு…. லயனோட ஃப்ரெண்டு என்ன? டைகர் தானே. டைகர் இருக்கே அப்படின்னுட்டு போனுதாம். போயி விலாய்டுட்டு (விளையாடிட்டு) வந்துதாம். போய் விலாய்டிட்டு எல்லாம் பண்ணிட்டு வந்துதாம். அப்பாடா நம்மளுக்கு இந்த ஃப்ரெண்டுதான் பெஸ்ட் ஃப்ரெண்டுன்னுட்டு ஒரு தட்டு தட்டிட்டு போயிட்டாங்களாம் ரெண்டு பேரும்… அப்புறம் லயனுக்கு ஒரு நெட் போட்டு வச்சுருந்தாங்க. அதான் அதோட வீடு. அப்படி போட்டு வச்சுருந்தாங்களா.. எல்லாம் சமயல் பண்ணி சாப்பிடும். இங்க போறதுன்னா போயிக்கும். எல்லாம் பண்ணுமா?… அந்த… ஒரு முட்டாள் புடிச்ச கிளி என்ன பண்ணும் தெரியுமா? ஒரு இறந்த கிளி என்ன பண்ணினுது தெரியுமா? அதுக்கும் முட்டாள்.. அந்த ரெண்டு கிளிக்கும் முட்டாள் புடிச்சுடுமாம். ஏன் தெரியுமா? அது முட்டை சாப்பிட்டதுன்னால முட்டாள் புடிச்சுடுமாம். லயன் வந்து டன் டான் டாஆஆன்னு டான்ஸ் ஆடினுதுல்ல? அதுனால முட்டை சாப்பிட்டு முட்டாள் புடிச்சுதாம். அப்புறம் ரெண்டு பேரும் என்ன பண்ணிட்டுருந்தாங்க தெரியுமா? லயனோட டான்ஸயே எல்லாருக்கும் ஆடி காமிச்சாங்களாம். “ஏய் இந்த டான்ஸ் ஃபுல்லா நல்லா இருக்கு” அப்படின்னவுடனே, ஒரு இலை.. அத எடுத்து பிரட்டி சப்பாத்தி மாவு மாதிரி பிசஞ்சு அது கிரீன் சப்பாத்தி பண்ணுறாங்களாம். அப்படி பிசஞ்சு, இதுல, எண்ணையில போட்டு, போண்டா மாதிரி பொறிச்சு எடுத்தாங்களாம். ஒரு கிரீன் போண்டான்னு பேர் வச்சுருந்தாங்களாம். ரெண்டு பேரும் சாப்பிட்டு, பெருஸ்ஸாகி வளந்து, ஸ்கூலுக்கெல்லாம் போயி, சமச்சு சாப்பிட்டு, எல்லாம் பண்ணினாங்களாம். அந்த நேரத்துல அந்த லயன்… அந்த ரெண்டு பேருக்கும், அந்த ரெண்டு கிளிக்கும் முட்டாள் புடிச்சதுனால, அந்த லயனுக்கும் ரொம்ப சிரிப்பா வந்துடுமாம். இந்த ரெண்டு கிளிக்கும் முட்டாள் புடிச்சுது அப்படின்னவுடனே, இப்ப நாம என்னெல்லாம் திங்கலாம் அப்படின்னவுடனே, ரெண்டு கிளியும் இறந்து போயிருக்கும் அப்படின்னவுடனே, நாம எல்லாரும் திங்கலாம் அப்படின்னவுடனே, சொல்லி போயி அந்த ஒரே ஒரு முட்டைய, ஒரு சொட்டு பிச்சு, டக்குனு எடுத்து வாயில போட்டுடுச்சாம். ஏன்னா அந்த கிளி டக்குனு பறந்து வந்துடுத்தாம். டக்குனு ஒரு சொட்டு, ஒரு சொட்டு எடுத்துகிட்டுதாம். அந்த கிளி வந்து முறச்சு பார்த்துதாம். ”ஏன் என்னோட முட்டைய எடுத்த? அதுலேர்ந்து என்னோட கோழி குஞ்செல்லாம் வரும்” அப்படின்னவுடனே “அப்படியாஆஆஆ… புரின்சுது, நீதான் இதுக்காக முட்ட வச்சுருக்க. நீ சாப்பிடுற இல்ல? நான் சாப்பிடக்கூடாதா கொஞ்சம்” அப்படின்னவுடனே, மூணு இதுக்கும் சண்ட வந்துக்கிட்டேயிருந்துதாம். கடைய்சில ஒரு கிளிக்கு வேதனை ஆயிடுச்சாம். ”என்னடா இது நம்மளுக்கு தான் இதுவா இருக்கு ஒரே.. முட்டாள் புடிச்சுதே அந்த கிளி எங்க போச்சு” அப்படின்னவுடனே, ”சரி நாளைக்கு தேடிக்குவோம்” அப்படின்னவுடனே, “நாளைக்கு நம்ம ஒரு பத்து…அந்த போண்டா.. கிரீன் போண்டா பொறிச்சிட்டு இருந்துதுல்ல ரெண்டும், அத எடுத்து சாப்பிட்டுக்குவோம், ஒண்ணே ஒண்ணு எடுத்து சாப்பிட்டுக்குவோம், நல்லா இருந்தா சாப்பிடுவோம், இல்லன்னா தூக்கி போட்டுடுவோம்” அப்படின்னு சாப்பிட்டு பார்த்துதாம். நல்லா இருக்கு அப்படின்னுட்டு நாளைக்கு பார்த்தா கெட்டு போச்சாம். தெரியவே இல்ல அந்த கிளிக்கு. முங்குதாம் பாக்கல, ஒண்ணு சாப்பிட்டு பார்த்துதாம். “என்ன இது கெட்டு போன மாதிரி தெரியுதே” அப்படின்னவுடனே, தூன்னு துப்பிட்டு, வேற போண்டா.. பொற்ற்ற்றீச்சு, நல்லா மொறூ மொறூன்னு பண்ணினுதாம். ரெண்டு கிளிக்கும்… நல்லா இப்படி நாக்க நீட்டி சாப்பிட்டுதாம். ”ஏய் சூடு” அப்படின்னுட்டு கொண்டு போய் வச்சு.. டேபிள்ல வச்சு ஃபேன்லாம் போட்டு ஸ்ஸ்ஸ்னு சுத்திட்டு வந்துதாம். கொஞ்சம் ஸ்லோ பண்ணிட்டு எடுத்து சாப்பிட்டுட்டு வந்துதாம். சரி இலை போண்டா பொறிப்போமா அப்படின்னுட்டு பொறிச்சாங்க. பொற்ற்ற்றீச்ச்சு, நல்லா எண்ணையில காஆஆய விட்டாங்களாம் அப்படியே… ரெண்டையும் அப்படியே முட்டாள் புடிச்ச கிளி மாதிரி, முட்டாள் பிடிச்ச போண்டா அப்படின்னு, அது கிரீன் போண்டாதானே அது பேரு, “முட்டாள் பிடிச்ச போண்டா”வாம் இது. அது ஏங்கரிதி (ஏற்கனவே) அப்படித்தான். ஃபேன் சுத்திக்கிட்டு அப்படியே கிர் கிர் கிர்னு சத்தம் கேக்கும். தின்னுட்டு வயிறு அடங்கிடுத்தாம் அப்படின்னுட்டு சந்தோசம். அப்படி,… அயோத்தில ராமர் வந்தார்னு எல்லாரும் சந்தோசப்பட்டு பட்டாசெல்லாம் வெடிச்சாங்கள்ல, அது மாதிரி பட்டாசெல்லாம் வெடிச்சு, தீபாவளிக்கு நல்லா இது பண்ணினாங்களாம். கொண்டாட்டம் ஆடினாங்களாம். கொன்னேரம் கரிச்சு (கொஞ்ச நேரம் கழிச்சு), ”போதும் நமக்கு பட்டாசு, ஏய் இன்னொரு தீபாவளி வந்திருக்கு” அப்படின்னு பட்டாச எடுத்து இப்படி இப்படி சுத்தி கன்(gun)லாம் வெடிச்சு, பட்டாசு ஃபுல்லா தீர்த்துட்டாங்களாம். தீர்த்துட்டு (கொஞ்சம் யோசித்துவிட்டு) என்னென்ன வாங்கினாங்க தெரியுமா? ஒரு தீப்பெட்டி.. ஏத்துறதுக்கு வாங்கிட்டு வந்தாங்க. அப்புறம் பிஜிலி, சாட்டை, அப்புறம் புஸ்வாணம், வெடி… நெறய வெடி, உனக்கு தெரியுமில்ல? பாம்பு எல்லாம் வச்சுருப்பாங்களா.. அதான் வெடி. அதெல்லாம் எடுத்து வச்சுட்டு இருந்தாங்களாம். “அப்பாடா.. ஜாலியா இருந்தது” அப்படின்னுட்டு, கொழுக்கட்டையெல்லாம் சாப்பிட்டு, கொண்டாட்டம் நல்லா – நிஜமா விடவேயில்ல. ஒரு gapகூட விடல – சாப்பிட்டு தூங்கி அப்படியே எய்ந்துருச்சு காலையில ஆயிடுச்சு. மத்தியானம் காலையில ஆகும்ல அதுமாதிரி இருந்துச்சாம். சரி தூங்கு அப்படின்னு தூங்கினாங்களாம். ஒரு – ஹரிணி வந்து அப்பாவ வந்து கத சொல்லு கத சொல்லுன்னு டிஸ்டர்ப் பண்ணுவாள்ல (சிரிப்பு) – அப்பா இப்ப கத சொல்லமாட்டேன் நாளைக்கு சொல்றேன் அப்படின்னு சொன்னாங்களாம். அந்த ஹரிணி முனங்கினாளாம். அப்பா திட்டினாங்களாம்(சிரிப்பு). அதான் கத

பின்குறிப்பு :
தினமும், தூங்குவதற்கு முன் “கதை சொல்லு கதை சொல்லு” என்று ஹரிணி என்னை கேட்பாள். ”இன்று எனக்கு அசதியாக இருக்கிறது. அதனால் நீ எனக்கு கதை சொல்” என்று நான் அவளை கேட்டதற்கு அவள் சொன்ன கதை இது. தூக்கம் வரவில்லை. மயக்கம்தான் வந்தது. Smile

விகடனின் பொறுப்பற்ற போக்கு!

சமீபத்தில் சென்னை வெள்ளத்தில் மூழ்கியபோது சென்னை, நந்தம்பாக்கத்திலிருந்து போருர் சிக்னல் செல்லும்வழியிலுள்ள டி.எல்.எஃப் தகவல் தொழில்நுட்ப பூங்கா வளாகத்தைப் பற்றி பின்வரும் செய்தியை “டி.எல்.எஃப். ஐ.டி.வளாகத்தில் என்ன நடக்கிறது? – மறைக்கப்படும் மர்மம்!” என்ற தலைப்பில் அதன் இணையதளத்தில் வெளியிட்டிருந்தது.
http://www.vikatan.com/news/tamilnadu/56139-what-happening-in-dlf-complex-hidden-mystery.art
கொஞ்சம் விஷயமறிந்தவர்களுக்கு கூட கடும் எரிச்சலைக் கிளப்பக்கூடிய வகையில் அந்தக் கட்டுரை எழுதப்பட்டிருந்தது.நான் அந்த வளாகத்தில் செயல்படும் ஒரு நிறுவனத்தில்தான் வேலை பார்த்து வருகிறேன். இந்தச் செய்திவெளியிடப்படுவதற்கு இரண்டு நாட்கள் முன்பு (டிசம்பர் 7ம் தேதியன்று) நான் அங்குச் சென்றிருந்தேன். அந்தச் செய்தியில்சொல்லியிருந்ததை விடக் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வளாகத்தின் நுழைவு வாயில்அடைக்கப்பட்டு, காவல் துறையினராலும், அங்கு வேலைபார்க்கும் பாதுகாவலர்களாலும் பாதுகாக்கப்பட்டிருந்தது. பழையபடங்களில் மூடப்பட்ட தொழிற்சாலை முன்பு வேலையாட்கள் காத்திருப்பதாக காட்டுவார்களே, அதுபோலஎன்னைப்போன்று பல பேர் அங்கு காத்துக்கொண்டிருந்தோம். புகைப்படங்களில் பார்த்திருக்கலாம். அங்கேஉள்ளேயிருக்கும் நிறுவனங்களின் நிர்வாகத்துறையை சேர்ந்த பணியாளர்கள் கையில் தங்கள் அலுவலகத்தின் பெயர்எழுதிய அட்டைகளை வைத்துக்கொண்டிருந்தனர். அந்தந்த நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அவர்களிடம் தகவல்களைவிசாரித்து அறிந்து கொண்டிருந்தனர். எங்கள் அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் எங்கும் தென்படவில்லை என நானும் என்கூட வேலைபார்ப்பவரும் சலித்துக்கொண்டோம். ஒருவழியாக அவர் வந்து எங்களை ஐந்து அல்லது பத்து பேராக உள்ளேஅனுப்பினார்.
உள்ளே சென்று அவரைப்போன்றோரின் பணிகளை பார்த்தபோதுதான் நாங்கள் சலித்துக்கொண்டது முட்டாள்தனம் என்றுபுரிந்தது. கடுமையான பணிச்சுமை. மின்சார இணைப்பும், UPS இணைப்புகளும் முழுமையாகச் செயலிழந்திருந்தன. ஒருதகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு ஒருமுறை சென்றுவந்தவர்களுக்குக்கூட நான் சொல்லவருவது புரியும் என்றுநினைக்கிறேன். இம்மாதிரி நிறுவனங்களுக்கு (விகடனின் அலுவலத்திற்கும் இது பொருந்துமென்று தான் நினைக்கிறேன்),பாதுகாப்பிற்கு நிர்வாகத்துறை பணியாளர்களும், பாதுகாவலர்களுமே பொறுப்பு. உள்ளேயிருக்கும் ஒவ்வொருபொருட்களையும் இவர்களே பாதுகாக்கவேண்டும். சர்வர் இயந்திரங்களிலிருந்து, எங்களைப் போன்ற ஊழியர்கள்வைத்துவிட்டுச் செல்லும் தனிப்பட்ட பொருட்களும் இவர்கள் பாதுகாப்பிலேயே இருக்கிறது. மின்சாரத்தின்துணையோடுதான் இவர்களால் இவ்வளவு விலை மதிப்புள்ள பொருட்களை பாதுகாத்து வர முடிகிறது.
மின்சாரம் முழுவதும் தடைப்பட்டதால், சிசிடிவி காமிராக்கள், அக்சஸ் கண்ட்ரோல் உபகரணங்கள் என எவையுமே வேலைசெய்யவில்லை. இம்மாதிரி நிலையில் அவர்களால், எங்களைப் போன்ற ஊழியர்களையே நம்பமுடியாத சூழ்நிலை.ஆனால் நாங்களோ முன்கோபத்திற்குப் பெயர்போனவர்கள். ஏதாவது ஒரு சிறிய அவமதிப்பென்றாலும், இம்மாதிரிபணியாளர்களை எடுத்தெறிந்து பேச தயங்காதவர்கள். (நானே அம்மாதிரி சிலமுறை பேசியிருக்கிறேன்) ஆனால் இந்தச்சூழ்நிலையிலும் கூட எங்கள் நிறுவனத்தின் நிர்வாகத்துறை பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த உள்ளூர்மற்றும் வட இந்திய பாதுகாவலர்கள் நன்றாகவே பணியாற்றினார்கள் என்பதே என் அனுபவம். பொறுமையாகஒவ்வொருவரிடமும் நிலைமையை ஓரளவு விளக்கி, தத்தமது பொருட்களை அலுவலகத்திலிருந்து எடுத்துக்கொண்டுசெல்ல உதவினர். லிஃப்ட் வேலை செய்யாத நிலையில், ஒரு பாதுகாவலர், என் போல உள்ளே வரும் ஊழியர்களைச் சிறுகுழுக்களாகப் பிரித்து, மாடிப்படி வழியாக அழைத்துச் சென்று பொருட்களை எடுத்துக்கொள்ள உதவினார். பலமுறை ஏறிஇறங்கியதால் நடக்கும்போது கூட மூச்சிறைத்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தார். செல்ஃபோன்கள் வேலை செய்யாதநிலையில் வயர்லெஸ் வாக்கி டாக்கிகளை வைத்துக்கொண்டு வேலை பார்த்துக்கொண்டிருந்தனர்.
நிலைமை இவ்வாறிருக்க, நுழைவு வாயிலில் வந்து, ஏதாவது ஒரு பத்திரிக்கையின் அடையாள அட்டையைஅணிந்துகொண்டு (அல்லது அணியாமலே கூட) விலாவாரியாக கேட்கும் ஒவ்வொருவருக்கும் இந்தக் காவலர்கள் பதில்சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பது… கொஞ்சம் மனிதத்தன்மையற்ற செயல் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.மொழி தெரிந்த நமக்கே இந்த மழை வெள்ளத்தில் பீதி கிளம்பி சுற்றிக்கொண்டிருந்தோம். ஆனால் மொழி தெரியாத அந்தஇளைஞர்கள், பீதியடையக் கூடாது என்று எதிர்பார்க்கிறோமா? இன்னொரு முக்கிய விஷயம். நான் சென்ற நேரத்தில்இந்தப் புகைப்படங்களில் காட்டும் அளவைவிடக் கூட்டம் நிறைய இருந்தது. வண்டிகளில் சென்றவர்கள் கூட நின்று பார்த்துவிட்டுச் சென்றனர். மேலும் நான் சென்று முதலில் விசாரித்தபோது கூட சாதாரண உடையிலும், அடையாள அட்டையைக்கூட காட்டாமலும் விசாரித்தேன் என்பதை இப்போது நினைவு கூறுகிறேன். உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவதற்குசற்றுமுன்புதான் அடையாள அட்டையை அணிந்து கொண்டேன். நான் அங்கு ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறேன்என்று அவர்களுக்குத் தோன்றுவதற்கு எந்தச் சாத்தியமுமில்லை. அப்போதிகூட, இம்மாதிரி வட இந்திய பாதுகாவலர்கள்பொறுமையாகத்தான் பதிலளித்தனர். யாரும் யாரையும் விரட்டவில்லை. இம்மாதிரி அவசர சூழ்நிலையில், அவ்வாறுவிரட்டியிருந்தால் கூட தவறில்லை என்றுதான் நினைக்கிறேன். நாமெல்லாம் சுகமாகவே வாழ்ந்து பழகியிருப்பதால்,இம்மாதிரி அவசர சூழ்நிலையில் எவ்வாறு நடந்து கொள்வது என்றுகூடத் தெரியவில்லை என்று நினைக்கிறேன்.
சுனாமி நேரத்து நிகழ்வுகளைப் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ஒரு கட்டுரையில், பாதிக்கப்பட்ட மக்கள்தங்களிடம் மரியாதையுடன் நடந்துகொள்ளவில்லை என்று அரசு அதிகாரிகள் சலித்துக்கொண்டதாக எழுதியிருப்பார். அந்தவியாதி நமது பத்திரிகைக்காரர்களுக்கும் பரவிவிட்டதோ என்று தோன்றுகிறது. தான் எங்கு வேண்டுமென்றாலும் சென்றுஎன்ன வேண்டுமென்றாலும் கேட்பேன். ஆனால் மக்கள் சாகக்கிடந்தாலும், பதில் சொல்லிவிட்டுத்தான் சாகவேண்டும்என்று நினைப்பார்களோ என்னவோ?
இன்னொரு முக்கிய விஷயம். எனக்குத் தெரிந்த ஒருவர் சொன்னார். “வெள்ளமென்றால் அடித்து பீரிட்டுக்கொண்டுவரவில்லை. தண்ணீரின் மட்டம் ஏறிக்கொண்டே சென்றது. அவ்வளவுதான். அதுவும் கூட வெகுவேகமாக ஏறவில்லை.நிதானமாக ஆனால் கவலை தரக்கூடிய அளவில்தான் ஏறியது. தண்ணீரை அகற்ற ஆரம்பித்தபிறகு அடித்தளத்தில் சென்றுபார்த்தபோது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களோ, அல்லது சைக்கிள்களோ கூட ஒன்றின்மேல் ஒன்று ஏறிநிற்கவில்லை. வெறுமே தண்ணீரில் முழுக்க மூழ்கி மட்டுமே நின்று கொண்டிருந்தன. தண்ணீர் அடித்துக்கொண்டுவந்திருந்தால் இவையெல்லாம் தண்ணீரின் வேகத்தில் அடித்துச் சென்று விழுந்து கிடந்திருக்கும்.” என்றார். இவ்வாறுநிதானமாக வந்த தண்ணீரிலிருந்து தப்பிப்பது மிகவும் எளிது. ஆகவே உயிர்ச்சேதம் எதுவும் நடந்திருக்க வாய்ப்புகள்குறைவு என்றே நான் நினைக்கிறேன். அலட்சியமாக உள்ளேயே இருந்து, அல்லது எக்குத்தப்பாக மாட்டிக்கொண்டிருந்தால்மட்டுமே உயிர்ச்சேதம் நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது.
இப்படியிருக்க, எந்தத் தகவலுமின்றி, ஊகத்தின் அடிப்படையில், உயிர்ச் சேதம் நடந்திருக்கலாம் என்று செய்தி பரப்புவதுதிமிர்த்தனம். சமீபத்தில் வெளியிட்டிருக்கும் இந்தச் செய்தியில் (http://www.vikatan.com/news/coverstory/56167-whats-happening-inside-dlf-it-park.art) டி.எல்.எஃபில் நடப்பதை அரசின் கவனத்திற்கு கொண்டுவருவதற்காகவே இதை வெளியிட்டோம் என்றுசப்பைக்கட்டு கட்டுகிறார்கள். ஆனால் நான் முதலில் கொடுத்திருக்கும் செய்தியை வாசித்துப்பாருங்கள். அவ்வாறு எந்தவார்த்தையோ எண்ணமுமே கூட அந்தச் செய்தியில் இல்லை என்பது தெளிவாகவே தெரியும். இப்படிக் கவலைப்பட்டுஎழுதியிருப்பவர்கள், தங்களது விகடன் அலுவலகத்தில் என்ன நடந்தது என்று நான் சென்று விசாரித்தால் எப்படி நடந்துகொள்வார்கள்? அல்லது அம்மாதிரி ஒரு செய்தியையாவது வெளியிட்டிருக்கிறார்களா என்ன?
டி.எல்.எஃபை பொறுத்தவரையில், குறைகள் இருக்கின்றன. எல்லாக் கட்டிடங்களிலுமே குறைகள் இருக்கத்தான்செய்கின்றன. அவற்றைப் பட்டியலிடுங்கள். வேண்டாமென்று சொல்லவில்லை. மற்றபடி இம்மாதிரி ஒரு அவசர சூழலில்கூட எந்த ஆதாரமுமில்லாமல், பொறுப்பற்ற முறையில் செய்திகளை வெளியிடுவது எந்த மாதிரி பத்திரிக்கை தர்மம்என்று தெரியவில்லை.

கிருத்திகா–இந்திய நாட்காட்டி

அறிமுகம்

இந்திய நாட்காட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ள பலவிதமான முக்கிய தினங்களை, விஷயங்களை நமக்கு நினைவு படுத்துவதற்காக செய்யப்பட்ட ஒரு எளிய, சிறிய முயற்சி இது. கீழே காணப்படும் தகவல்களை மாத நாட்காட்டிகளில் இருந்தும், பஞ்சாங்கங்களில் இருந்தும் எடுத்து அவற்றை ஒரு கூகிள் காலண்டரின் வழியாக பகிர்வதே இதன் நோக்கம்.

என்னென்ன விவரங்கள் இந்த நாட்காட்டியில் கிடைக்கின்றன?

 • முக்கிய தினங்கள் (தலைவர்களின் பிறந்த நாள் / நினைவு நாள் முதலியன)
 • அரசு விடுமுறை தினங்கள்
 • ஹிந்து மதம் தொடர்பான விவரங்கள்.
  • பண்டிகைகள்.
  • விரத தினங்கள்.
  • முக்கிய நாட்கள்
   • பிரதோஷம், சுபமுகூர்த்த நாள்
   • அமாவாசை, பௌர்ணமி
   • அஷ்டமி, கரிநாள்
   • மாத, வருட பிறப்புகள்
  • முக்கிய நேரங்கள்
   • நல்ல நேரம், ராகு காலம், குளிகை, எமகண்டம்
 • மற்ற மத பண்டிகைகள் (இப்போதைக்கு பெரிய பண்டிகைகள் மட்டுமே இதுவரை இணைத்துள்ளேன். கூடிய விரைவில் இவற்றை மேம்படுத்த முனைகிறேன்)

இதை எப்படி பயன்படுத்துவது?

இணையத்தில் நேரடியாக இந்த நாட்காட்டியை பின்வரும் இணைப்பை பயன்படுத்தி பார்க்கலாம்.

http://bit.ly/Krithika-IndianCalendar

பொதுவாக பின்வரும் படத்திலுள்ளது போல் தோற்றமளிக்கும். ஒரு குறிப்பிட்ட நாளுக்குரிய தகவல்களையோ அல்லது ஒரு வாரத்திற்கான தகவல்களையோ காட்டுமாறு மாற்றிக்கொள்ளலாம்.

image

இந்த நாட்காட்டியை உங்களது தனிப்பட்ட நாட்காட்டி மென்பொருளிலும் இணைத்துக்கொள்ளலாம். இதையே நானும் பரிந்துரைக்கிறேன். இதற்கான முக்கியமான காரணமாக நான் கருதுவது – ஒருமுறை இணைத்துக்கொண்டபின், என்னுடைய இந்த நாட்காட்டியிலுள்ள அனைத்து விவரங்களும் உங்களது நாட்காட்டி மென்பொருளில் வந்து சேர்ந்துவிடும். அதன்பின்னர் நீங்கள் இணைய இணைப்பில் இல்லாதபோதும் இதை பயன்படுத்தலாம்.

ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், நான் ஏதேனும் கூடுதல் விவரங்களை (புதிய விஷயங்களையோ, அல்லது ஏற்கனவே இருக்கும் விஷயங்களில் கூடுதல் தகவல்களையோ இணைக்கும் பட்சத்தில்) உங்களால் திரும்ப இணைய இணைப்புக்கு வரும்வரை பெறமுடியாது. ஆகவே, அவ்வப்போது மட்டும் இணைய இணைப்பிற்கு வந்து செல்வது நல்லது. ஏதேனும் புதிய விவரங்கள் இந்த நாட்காட்டியில் சேர்க்கப்படும்போது மின்னஞ்சலில் அந்த செய்திகளை பெறும் வசதியை உருவாக்க இருக்கிறேன். ஆனால் இப்போது வேறு வழியில்லை.

மேலும் இந்த நாட்காட்டியை நீங்கள் ஸ்மார்ட் ஃபோன் வைத்திருக்கும் பட்சத்தில், அதிலுள்ள காலண்டர் ஆப்பில் இணைத்துக் கொள்ளலாம். இதன்மூலம், விவரங்களுக்கான நினைவூட்டலை எளிதாக பெறலாம் (இணைய இணைப்பிலில்லாதபோதும்!). உண்மையில் இதை மனதில் வைத்துதான் இந்த முயற்சியை தொடங்கியிருக்கிறேன். கூகிள் காலண்டர் அல்லது அவுட்லுக் ஆப்புகளில் இதை இணைத்துக்கொள்ளலாம்.

நமது தனிப்பட்ட கூகிள் கணக்கிலுள்ள காலண்டரில் எப்படி சேர்த்துக்கொள்வது என்பதை இங்கே (https://support.google.com/calendar/answer/37100?hl=en) விளக்கியிருக்கிறார்கள். “Add using a link” என்ற பகுதியை பார்க்கவும். இந்த நாட்காட்டிக்கான ICAL link இதோ – http://bit.ly/Krithika-IndianCalendar-ics-File

எவ்வெப்போது தகவல்கள் புதுப்பிக்கப்படும்?

மாத நாட்காட்டிகள் மற்றும் பஞ்சாங்கங்களிலிருந்து இந்த தகவல்கள் பெறப்படுவதால், ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் வரைக்குமான தகவல்கள் முந்தைய வருடத்தின் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் புதுப்பிக்கப்படும். ஏப்ரல் முதல் டிசம்பர் வரைக்குமான தகவல்கள் முந்தைய வருடத்தின் நவம்பர், டிசம்பர் மாதங்களில் புதுப்பிக்கப்படும். ஆகவே இந்த மாதங்களில் ஒருமுறை இணைய இணைப்புக்குள் வந்தால் கூட போதுமானது. இது குறித்த அறிவிப்புகள் நல்லேந்தலில் டிவிட்டர் பக்கதில் வெளியிடப்படும் (இப்பதிவின் கடைசி பகுதியை பார்க்கவும்). உதாரணமாக தற்போது 15 ஏப்ரல் 2016 வரைக்குமான தகவல்கள் ஏற்றப்பட்டிருக்கின்றன. 15 ஏப்ரல் 2016 முதல் டிசம்பர் 2016 வரைக்குமான தகவல்கள் இன்னும் 15, 20 நாட்களுக்குள் ஏற்றப்படும்.

நினைவூட்டல்களை (Notifications) எப்படி உருவாக்குவது?

நீங்கள் இந்த நாட்காட்டியை உங்கள் மென்பொருள்/செயலிகளில் இணைத்தபின், இந்த நாட்காட்டியிலுள்ள விவரங்களை உங்களுக்கு தேவைப்படும் விதத்தில் நினைவூட்டுவதற்கு உங்கள் செயலியை மாற்றியமைத்துக் கொள்ளலாம். இந்த விஷயத்தில் தற்போது இருக்கும் வசதிகள் எனக்கு அவ்வளவாக திருப்தியில்லை. கொஞ்சம் கூடுதல் சௌகரியங்கள் தேவைப்படுகின்றன. ஆனாலும் இப்போதைக்கு இவற்றுக்கு வழியில்லை என்பதால் இருக்கும் வசதிகளைத்தான் பயன்படுத்திக்கொள்ளவேண்டியிருக்கிறது.

உதாரணமாக, ஒரு பண்டிகையோ அல்லது ஒரு விரத தினத்தையோ, ஒரு வாரத்திற்கு முன்னர் ஒருமுறையும், இரண்டு நாட்களுக்கு முன் ஒரு முறையும், முந்தைய நாள் இரவு ஒருமுறையும் நினைவூட்ட வேண்டும் வகையில் இந்த நாட்காட்டியை அமைக்கவேண்டுமென்று விரும்புகிறேன். ஆனால் உங்கள் கருவிகளிலுள்ள செயலியை என்னால் இந்த நாட்காட்டி மூலம் என்னால் கட்டுப்படுத்த முடியாது. ஆகவே நீங்கள் உங்கள் செயலியில் இந்த விவரங்களை 1 மணி நேரத்திற்கு முன் நினைவூட்டுமாறு வைத்துக்கொள்ளுங்கள். மற்ற விவரங்களை அவ்வப்போது உங்கள் நாட்காட்டியை பார்ப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த கட்டுப்பாடு உண்மையில் எனக்கு எரிச்சலை தருகிறது. வரும் காலங்களில் ஏதாவது முன்னேற்றம் நிகழ்கிறதா என்று பார்க்கலாம்.

என்னென்ன வசதிகள் வரவிருக்கின்றன?

குறிப்பிட்ட தமிழ் மாதங்களில் வரும் நட்சத்திரங்கள் அல்லது திதிகளை மின்னஞ்சல் மூலம் நினைவூட்டுதல். இதன் மூலம் நட்சத்திர அடிப்படையிலான பிறந்த நாட்கள் மற்றும் திதி அடிப்படையில் திவசத்திற்கான நாட்கள் ஆகியவற்றை தானாக தெரிந்துகொள்ளலாம்.

தர்ப்பணத்திற்கான அல்லது விரதங்களுக்கான நாட்களை மின்னஞ்சலில் பெறுதல்.

தனிப்பட்ட நினைவூட்டல்களை இந்த நாட்காட்டியிலிருந்து பெறுதல்.

விடுமுறையை திட்டமிடுவதற்கான உதவிகள்.

குறிப்பு : இவை எல்லாம் எனது விருப்பங்கள் மட்டுமே. மேலோட்டமாக அலசிப்பார்த்ததில் இவை சாத்தியமென்றே தோன்றுகிறது. எனினும், தொழில்நுட்ப சாத்தியங்கள், இவ்வசதிகள் கொடுக்கபோகும் உண்மையான பயன்கள், என்னுடைய சுறுசுறுப்பு , ஆர்வம் போன்ற காரணிகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு இவை உட்பட்டவை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

என்னென்ன புறக்கட்டுப்பாடுகள் உள்ளன?

இந்த நாட்காட்டி, கூகிளில் உருவாக்கப்பட்டுள்ளதால், நாட்காட்டி குறித்த அந்த நிறுவனத்தின் அனைத்து வசதிகளும் கிடைப்பதுபோல், கட்டுப்பாடுகளும் வந்து சேர்கின்றன! உதாரணமாக சமீப காலம் வரை குறுஞ்செய்திகள் மூலமாக நினைவூட்டல்களை அனுப்பும் வசதியை கூகிள் வைத்திருந்தது. இப்போது அது நிறுத்தப்பட்டுவிட்டதால் நம்மாலும் அதை பெறமுடியவில்லை. இம்மாதிரி கட்டுப்பாடுகள் உள்ளன. கூடுமானவரை இவற்றை கவனித்து களைய அல்லது மாற்று ஏற்பாடுகள் செய்ய முயற்சி செய்கிறேன். மற்றபடி கடவுள் சித்தம்!

மேற்கொண்டு தகவல்களை பெற…

முக்கிய தகவல்களை இந்த வலைப்பூவில் தொடர்ந்து பதிவிடுவேன். ஆகவே இங்கேயே தெரிந்து கொள்ளலாம். மேலும் சிறிய மாற்றங்கள் குறித்த தகவல்களை நல்லேந்தலுக்கான டிவிட்டர் பக்கத்தில் வெளியிடுகிறேன். பொதுவாக டிவிட்டர் பக்கத்தை தொடர்ந்து வாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

நல்லேந்தலுக்கான டிவிட்டர் பக்கம் : @nallenthal

நியூஸ்ஹண்ட் மற்றும் மாக்ஸ்டர் செயலிகளில் “காலம் – ஜெயமோகன் சிறப்பிதழ்”

image

காலம் பத்திரிக்கையின் ஜூன் மாத இதழ், எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் சிறப்பிதழாக வந்துள்ளது. துரதிருஷ்டவசமாக இந்த பத்திரிக்கையைப் பற்றி இப்போதுதான் முதன்முதலில் கேள்விப்படுகிறேன். எழுத்தாளர் நாஞ்சில்நாடனின் பதிவுகளை சமீபகாலமாக தொடர்ந்து படித்து வருகிறேன். அவ்வகையில் இவ்விதழில் ஜெயமோகன் குறித்து அவர் எழுதியுள்ள கட்டுரையின் பகுதியை அவரது இணையதளத்தில் பதிந்திருந்ததார். அதை படித்தபோது, அவ்விதழ் நியூஸ்ஹண்ட் (newshunt) மற்றும் மாக்ஸ்டர் (magzter) செயலிகளில் கிடைக்கிறது என தெரியவந்தது.

சரி, ஜெயமோகனுக்காக ரூ.75/- செலவழிக்கமாட்டோமா என்று நியூஸ்ஹண்ட்செயலிக்கு சென்றபோது, அங்கே அதன்விலை ரூ.19/- மட்டுமே என தெரியவந்தது. அடடே என்று வாங்கப்போனால் தள்ளுபடிகள் போக ரூ.5/- மட்டுமே செலவானது! இப்போது கொஞ்சம் குற்றவுணர்ச்சி கொள்கிறேன். கொஞ்சம் அலைந்து அந்த இதழை ரூ.75/-க்கே வாங்கியிருக்கலாம்.

அவரைப்பற்றி பலரும் எழுதியிருந்த கட்டுரைகள் மிக நன்றாக இருந்தன. வழக்கம்போல், அவர் சாதித்தவற்றில் ஒரு சிறு பகுதியையாவது நம்மால் செய்ய முடியுமா என்ற ஏக்கமும், செய்யவேண்டும் என்ற உணர்ச்சியும் தோன்றின.

இதற்கிடையில் நியூஸ்ஹண்ட் செயலியில் கிடைக்கும் மற்ற புத்தகங்களை சற்று துழாவினேன். நிறைய புத்தகங்கள் மலிவாகவும், இலவசமாகவும் கிடைக்கின்றன. குறிப்பாக பகவத்கீதைக்கு பாரதியாரின் உரை இலவசமாக கிடைக்கிறது. ஜெயமோகன் இதை பரிந்துரைத்திருக்கிறார். வெகுகாலம் முன்பு இதை படித்திருந்தேன். மீண்டும் படிக்கும்பொருட்டு தரவிறக்கி வைத்திருக்கிறேன். மற்றபடி, கல்கியின் நாவல்கள் (சோலைமலை இளவரசி) இலவசமாக கிடைக்கின்றன. நிறைய பெரியார் புத்தகங்கள் மலிவுவிலைக்கு கிடைக்கின்றன. ஆனந்தவிகடன், ஜூனியர் விகடன் போன்ற பத்திரிக்கைகளும் மலிவு விலையில் (ரூ. 5/-) கிடைக்கின்றன. நிறைய சிறுவர் புத்தகங்களும் உண்டு. பணத்தை வங்கி கடன் அட்டை மூலமாகவும் செலுத்தலாம். அல்லது நமது அலைபேசி கணக்கிலிருந்தும் செலுத்தலாம். போஸ்ட்பெய்ட் இணைப்பாக இருப்பின் வரிகள் சேரும்! 😉

இப்புத்தகங்களை இதன் செயலி வழியாக மட்டுமே படிக்கமுடியும் என்பது ஒரு பலவீனம். கணினியில் படிக்கமுடியாது. அதே நேரம், நாம் வாங்கிய புத்தகங்களை மீண்டும் மீண்டும் பல கருவிகளில் (நமது நியூஸ்ஹண்ட் கணக்கில் உள்நுழையும்பட்சத்தில்) இலவசமாக தரவிறக்கிக்கொள்ளலாம் என்பது இதன் கூடுதல் வசதி. உதாரணமாக பத்திரிக்கைகளை குடும்பத்தில் ஒருவர் வாங்கி அனைவரும் தத்தம் கருவிகளில் படிப்பது இதில் சாத்தியம். டேப்லட் வகை கருவிகள் இவற்றை படிப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பது என் எண்ணம். எனினும் என் அலைபேசியில் என்னால் எளிதாகவே படிக்கமுடிந்தது. நூற்குறிப்பு வசதியும் இந்த செயலியில் உண்டு என்பதால் ஏற்கனவே விட்ட இடத்திலிருந்து நம்மால் எளிதாக படிப்பதை தொடரமுடியும்.

இது  என் தனிப்பட்ட அனுபவம் மட்டுமே. மாக்ஸ்டரை பொறுத்தவரையில் நியூஸ்ஹண்ட்டில் கிடைக்கும் சலுகைகள் இதில் இல்லை. மேலும் என் அலைபேசியில் எழுத்துரு பிரச்சனை இருக்கிறது. செய்திகளின் உள்ளே சென்று பார்க்கும்போது சரியாக இருந்தாலும், தலைப்பு செய்திகள் இவ்வாறு இருப்பது கொஞ்சம் இடைஞ்சலாக இருக்கிறது. கொஞ்சம் முயன்றால் இதையும் நம்மால் வேகமாக படித்துவிடமுடியும் என்பது நம் மூளையின் சிறப்பம்சம்.

Screenshot_2015-08-02-07-43-32

உடையும் (!?) செய்திகளை உடனுக்குடன் தரும் வசதி மாக்ஸ்டரில் இருக்கிறது. ஆகவே இதை இன்னும் என் அலைபேசியில் விட்டு வைத்திருக்கிறேன்.

தொடர்புடைய இணைப்புகள்.

1. எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் பதிவு.
2. பாரதியாரின் கீதை உரை குறிப்பிடப்பட்டுள்ள ஜெயமோகனின் பதிவு.
3. நியூஸ்ஹண்ட் இணையதளம்.
4. மாக்ஸ்டர் இணையதளம்.

Create your website at WordPress.com
Get started