இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா செய்தது என்ன?–மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேச்சு

முன்னுரை காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை எனக்கு பெரிய மதிப்பு என்பது இல்லை. ஆனால் மத்திய அமைச்சர் திரு. ப.சிதம்பரம் குறித்து ஒரு நல்ல அபிப்பிராயம் உண்டு. அவர் எங்கள் ஊர்க்காரரும் கூட. மேலும் நான் முதன்முதலில் நேரில் பார்த்த அரசியல்வாதியும் அவர்தான். குறிப்பாக அவரது பேச்சுத்திறன் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அனைத்து தரப்பினருக்கும் புரியும் வகையில் பேசுவதில் வல்லவர். ஆனால் அவரது சில கருத்துக்கள் எனக்கு பிடித்தமானவை அல்ல. அவர் சார்ந்த கட்சிக்காக அவ்வாறு பேசுகிறார் […]

“Sadhana–A network that connects learners”–அறிமுகம்

அறிமுகம் சில வாரங்களுக்கு முன்பு, சாதனா – Sadhana என்னும் புதிய அப்ளிகேஷனை எனது இந்த இணையதளத்தில் தொடங்கியுள்ளேன். ஜூம்லா (Joomla) என்ற பிரபலமான content management system-ன் உதவியுடன் இதைத் தொடங்கியுள்ளேன். கணிப்பொறியியல் படிக்கும் மாணவர்கள் மற்றும் கணினி மென்பொருள் துறையில் பணியாற்ற விரும்பும் அனைவருக்கும் தேவையான தகவல்களை இதன் மூலம் பகிர்ந்து கொள்வது இதன் நோக்கம். மேலும் மாணவர்கள் உள்ளிட்ட இதன் பயனாளர்கள், தங்களுக்குள் செய்திகளை பகிர்ந்து கொள்ளவும் வசதிகள் அறிமுகப் படுத்த உள்ளேன். […]

பழைய பேப்பர் – துக்ளக்

முன்னுரை துக்ளக் இதழின் மீது பெரும் நம்பிக்கையும், விருப்பமும் கொண்டவன் நான். துக்ளக் இணையதளத்தில் அதன் பழைய இதழ்களும் (2006ம் வருடம் வரை) கிடைப்பதால், அவற்றில் கிடைக்கும் சுவையான விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்ற நோக்கத்தில் இந்தத் தொடர் பதிவுகளை ஆரம்பிக்கிறேன். மற்ற பத்திரிக்கைகளின் பழைய செய்திகளையும் (கிடைக்கும் பட்சத்தில்) சேர்த்துக் கொள்ளலாம் என்று இருக்கிறேன். தமிழனின் “பழைய பேப்பர் படிக்கும் பண்பாட்டின்” மீது நம்பிக்கை வைத்து இதைத் தொடங்குகிறேன். 2006ம் ஆண்டு மே 2ம் தேதியிட்ட […]

ஸ்மார்ட்ஃபோன் எல்போ அல்லது ஆங்க்ரி பேர்ட்ஸ் எல்போ (Smartphone Elbow or Angry Birds Elbow)

2012ம் வருட இறுதியில் என் மனைவிக்கு முழங்கை மூட்டில் சிறிய அளவில் வலி வந்தது. அப்போது நாங்கள் ஜெர்மனியில் வசித்து வந்தோம். பனிக்காலம் ஆரம்பித்த நேரம். கொஞ்சம் கொஞ்சமாக வலி அதிகரித்துக் கொண்டே வரவே, அங்கிருந்த மருத்துவர் ஒருவரிடம் ஆலோசனைக்கு சென்றோம். அவர் “இம்மாதிரி வலிகள் பொதுவாக இரண்டு காரணங்களால் வரலாம். ஒன்று, பனிக்காலத்தில் தசைகளின் இறுக்கம் காரணமாக. இரண்டு, அதிகமாக சிரமப்படுத்திக் கொள்வதால். மற்றபடி பயப்பட ஒன்றுமில்லை” என்று கூறினார். அவர் கூறிய மருந்துகளை எடுத்துக் […]

மூங்கில் குடில்

ஒரு Update : இந்த உணவகம் மூடப்பட்டுவிட்டது நேற்று இரவு போருர் சிக்னல் அருகே கடைகளுக்கு சென்றுவிட்டு, அப்படியே இரவு உணவை முடித்துக் கொள்ளலாம் என்று மூங்கில் குடில் என்று பெயரிடப்பட்டிருந்த உணவகத்திற்கு சென்றோம். மூங்கில் என்ற கருப்பொருளை வைத்து முழு உணவகத்தையும் வடிவமைத்திருக்கிறார்கள். உணவின் தரம் மற்றும் சுவை நன்றாக இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. மேலும் நிறைய, நிறைய உணவு வகைகள். கொஞ்சம் ஆச்சரியமாகவே இருந்தது. சில அரேபிய உணவு வகைகள் கூட இருந்தன! ஆனால் […]

விடாது கறுப்பு

தினமும் அலுவலகம் செல்லும்போது, குப்பை மூட்டையைக் கொண்டு சென்று வீதி முனையில் இருக்கும் குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்வது வழக்கம். வழக்கமான என் மறதியின் காரணமாக, அடிக்கடி குப்பையைக் கொட்ட மறந்து, அலுவலகம் வரை அந்த குப்பை மூட்டையை கொண்டு சென்று விடுவேன் 🙂 அன்றும் அப்படித்தான் ஆனது. சரி, வரும் வழியில் குப்பையை போட்டுவிடலாம் என்று திரும்ப கொண்டு வந்தபோது, சாலையில் ஒரு வேக உடைப்பானில் வண்டி ஏறியபோது குலுக்கலில் குப்பை மூட்டை கீழே விழுந்துவிட்டது. […]

சாப்பிடும் முறையில் கவனம் தேவை

சமீப காலமாக என் அம்மாவுக்கு, தாடை மற்றும் காதை ஒட்டிய பகுதியில் வலி இருந்து வருகிறது. ENT மருத்துவரிடம் ஆலோசித்தபோது, காதுகளில் பிரச்சனை இல்லை என்பது தெரிய வந்தது. பின் மேலும் சில ஆய்வுகளுக்குப் பிறகு, தாடையில் உள்ள எலும்புகளின் தேய்மானமே இதற்குக் காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. நாம் சாப்பிடும் முறையில் செய்யும் தவறுகளே இம்மாதிரியான தேய்மானங்களுக்குக் காரணமாக அமைவதாக அம்மருத்துவர் கூறினார். மேலும் என் அம்மாவிடம் அவர் உணவை உட்கொள்ளும் முறையைப் பற்றி கேட்டபோது வினோதமான […]

Munich-ல் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது

இந்த வலைப்பூவின் தொடக்கப் பதிவாக இது அமைந்தது துரதிருஷ்டம்தான். இருப்பினும் செய்தியின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு இச்செய்தி பதியப்படுகிறது. நான் வேலை நிமித்தமாக ஜெர்மனியின் ம்யூனிக் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். இங்கு சென்ற திங்கட்கிழமை (28/08/2012), இரண்டாம் உலகப் போரில் வீசப்பட்டு, வெடிக்காமல் பூமியில் அமிழ்ந்து போன ஒரு வெடிகுண்டு கண்டெடுக்கப் பட்டது! அந்த குண்டு… நன்றி : http://www.dailymail.co.uk நகரின் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், தற்போது ஒரு கட்டடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்றுக் […]

Create your website at WordPress.com
Get started