கும்பகோணத்திலிருந்து…

சமீபத்தில் என் அலுவலகத்தில் நடந்தது. அலுவலகத்தில் காஃபி வாங்குமிடத்தில் நின்றுகொண்டிருந்தபோது அருகில் வந்த ஒருவர், காஃபி போடுபவரிடம் ‘காஃபி ஃபரெஷ்ஷாக போடுகிறீர்களா?’ என்று கேட்டார். நானும் அருகிலிருந்த சிலரும் எங்களை கட்டுப்படுத்தமுடியாமல் திரும்பி அவரை பார்த்தோம். காஃபி அங்கே ஃரெஷ்ஷாக போடுகிறார்கள் என்பது பார்த்தாலே தெரியும். இவர் என்னடா இப்படி கேட்கிறார் என்று பார்த்தோம். காஃபி போட்டுத்தரும் பணியாளரும் சற்று எரிச்சலடைந்தாலும், பொறுமையாக ‘ஆமாம் சார்’ என்றார். அந்த நபர் ‘இல்ல சார், நான் ஏன் கேக்கிறேன்னா […]

உடல் ஒருபோதும் தவறு செய்யாது – எனது மகள் பிறந்த கதை

என்னைப்பற்றிய ஒரு சிறு அறிமுகம். கணிணி மென்பொருள்துறையில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக பணியாற்றிவருகிறேன். திருமணமாகி விட்டது. இரு பெண் குழந்தைகள் உள்ளனர். முதல் குழந்தைக்கு 5 வயதாகிறது, இரண்டாவது குழந்தை பிறந்து சில வாரங்களாகியுள்ளன. இந்த பதிவு என்னுடைய கடந்த ஒரு வருட கால அனுபவக்குறிப்புகள். இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்வது என்று முடிவெடுத்ததிலிருந்து குழந்தை பிறந்தது வரையிலான நிகழ்ச்சிகளின் சுருக்கமான நாட்குறிப்புகள். இந்த ஒரு வருடத்தில் என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான சிலவற்றை கற்றுக்கொண்டேன் என […]

ஹிந்து சமய ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி

திருவான்மியூர் பஸ் நிலையத்தின் பின்புறம் ராமச்சந்திரா கல்லூரி வளாகத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற இந்த கண்காட்சிக்கு கஷ்டப்பட்டு ஜூலை 13 அன்று சென்றுவந்தேன். நான் நினைத்திருந்ததைவிட பெரிதாகவே இருந்தது. நுழைந்து சிலநேரமானபோது கூட சிறியது, எளிதில் சுற்றிப்பார்த்துவிடலாமென்றுதான் நினைத்தேன். நிறைய கடைகள், சில ரதங்கள், சில தற்காலிக ஆலயங்கள், வழக்கம்போல் சாப்பாட்டுக்கடை மற்றும் ஒரு மண்டபத்தில் விசேஷ நிகழ்ச்சிகள் என்று நன்றாகவே களை கட்டியிருந்தது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டமும் கணிசமாக இருந்தது. வாயிலில் ஆச்சரியமாக பாதுகாப்பு […]

காமராஜை சந்தித்தேன் – சோ

சோ எழுதிய புத்தகங்களில் காமராஜை சந்தித்தேன் என்ற புத்தகம் மிக முக்கியமானதென்று நினைக்கிறேன். காமராஜ் இறந்த கொஞ்ச காலத்தில் துக்ளக்கில் சோ எழுதிய ஒரு கட்டுரைத்தொடரும், காமராஜுடன் பழகிய சிலர் எழுதிய கட்டுரைகளும் இந்த புத்தகத்தில் தொகுக்கப்பட்டிருக்கிறது. காமராஜைப் பற்றிய மற்ற புத்தகங்களுக்கும் இதற்கும் (சோ எழுதிய கட்டுரைத்தொடர்) ஒரு பெரிய வேறுபாடு உள்ளது. இதில் காமராஜைப் பற்றி எழுதியுள்ள விஷயங்கள், சோ காமராஜை நேரடியாக கண்டு அவருடன் உரையாடிய விஷயங்களை மட்டுமே இதில் தொகுத்து கூறியிருக்கிறார். […]

குழந்தைகளின் திறன்கள்

நேற்று நண்பனொருவனின் அழைப்பின்பேரில் மாற்றுக்கல்வி வழங்கும் ஒரு பள்ளிக்கு சென்றிருந்தேன். முதல் பங்கேற்பு என்பதால் அதுபற்றி நிறைய தகவல்களை அளிக்கமுடியவில்லை. சிலகாலம் பொறுத்து அதைப்பற்றி எழுதுகிறேன். அந்நிகழ்ச்சியில் குழந்தைகளின் திறன் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அவரவருடைய குழந்தைகள்/ தெரிந்த குழந்தைகளின் திறன்களைப் பற்றி பேச்சு சென்றது. அந்நிகழ்ச்சி முடிந்தபின்னரும் அதனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். “குழந்தைகள் திறனற்றவை, அவற்றிக்கு ஒன்றும் தெரியாது, நாம் கற்றுக்கொடுக்கும் பட்சத்தில் மட்டுமே அவை விஷயங்களை கற்றுக்கொள்கின்றன என்று நாம் நினைப்பது மிகவும் தவறு. […]

குழந்தைகளுடன் சீட்டு விளையாடுதல்

எங்கள் மகள் ஹரிணிக்கு (3.5 வயது) ஆண்டு விடுமுறை தொடங்கிய சமயத்தில் அவளுக்கு பொழுதுபோவதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்து சீட்டுக்கட்டு வாங்கலாம் என்று முடிவெடுத்தேன். என் அம்மாவைத் தவிர யாரும் ஆட்சேபிக்கவில்லை. ஒரு கட்டு மாத்திரம் வாங்கி ஹரிணியுடன் விளையாண்டேன் (விளையாண்டு வருகிறேன்). பின்வரும் விளையாட்டுக்களை அவள் மிகவும் ஆர்வமுடன் விளையாடுகிறாள். #1 Pairs நமக்கு மிகவும் அறிமுகமான விளையாட்டுதான். சீட்டுக்களை கவிழ்த்து வைத்துவிட்டு, இரண்டிரண்டாக எடுக்கவேண்டும். இரண்டும் ஒரே எண்ணாக இருந்தால் அதை எடுத்துக்கொள்ளலாம். […]

சைக்கிள் புராணம்

முந்தைய பதிவில் சொன்னபடி நான் சைக்கிள் வாங்கும்போது 6 கியர் வைத்ததற்கும், சாதா சைக்கிளுக்கும் ரூ.1000/-  மட்டுமே வித்தியாசம் இருந்தது. கியர் வைத்த சைக்கிள் ரொம்பவே ஆடம்பரமாக தோன்றினாலும் அதனாலும் நிறைய பலன்கள் உள்ளன. அவற்றையும், பத்ரியின் பதிவில் அவர் குறிப்பிட்டுருந்த அசௌகரியங்கள் குறித்த எனது கருத்துக்களையும் இதில் பார்க்கலாம். ஒரிஜினல் சைக்கிளில் ரேஸ் சைக்கிளுக்கு இருப்பதுபோன்ற வளைந்து நெளிந்த கைப்பிடிகளைக் கழட்டிக் கடாசிவிட்டேன். இது சரியல்ல என்பது என் எண்ணம். இம்மாதிரி வளைந்த கைப்பிடிகள் தொலைதூரம் […]

சைக்கிள் புராணம்

சமீபத்தில் பத்ரி சேஷாத்ரி எழுதிய சைக்கிள் க்ரானிக்கிள்ஸ் பதிவைத் தொடர்ந்து, நாமும் நமது சைக்கிள் புராணத்தை அளக்கலாமே என்று தோன்றியது. வழக்கம்போல் சோம்பல் காரணமாக இதோ அதோவென்று தள்ளிப்போட்டுக்கொண்டு வந்ததை இன்று எழுதுகிறேன்.  நான் சைக்கிள் வாங்க காரணமாக இருந்தது இரு விஷயங்கள். ஒன்று, பணி நிமித்தமாக ஜெர்மனியில் சிலகாலம் இருந்தபோது, அங்கிருப்பவர்கள் நிறையபேர் நிறைய விதங்களில் சைக்கிளை பயன்படுத்தியது. இரண்டு, நான் அந்த விஷயத்தை இங்கு வந்தபின் என் நண்பனொருவனிடம் சொல்லப்போக அவன் அதனால் உந்தப்பட்டு, […]

ராட்சச இயந்திரங்கள்

நண்பனொருவனின் திருமணத்தை முன்னிட்டு சில வருடங்களுக்குமுன் நெய்வேலி சென்றிருந்தோம். என் மற்றொரு நண்பரின் உறவினர் நெய்வேலி அனல்மின் நிலையத்தில் அப்போது வேலையிலிருந்தார். அவர்மூலமாக அந்நிலையத்தை சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நிறைய ஆச்சரியமளிக்கும் விஷயங்கள் தெரியவந்தன. சிலகாலம் ஆகிவிட்டதால் நிறைய விஷயங்கள் ஞாபகத்திலில்லை. முடிந்தவரைக்கும் எழுதுகிறேன். ஐம்பது வருடங்களுக்கும் மேலாக செயல்பட்டு வரும் அந்நிலையம் அப்பகுதியில் கிடைக்கும் நிலக்கரியை (மண்ணோடு) தோண்டியெடுத்து, அனல்மின் நிலையத்திற்கு அனுப்பி, மாசுக்களை நீக்கி  மின்சாரத்தை தயாரிக்கின்றது. இங்கு நிலக்கரியைத் தோண்டியெடுப்பதற்கு பயன்படுத்தப்படும் […]

Lemon Rice ( எலுமிச்சை சாதம்)

Ingredients : Rice 2 cups Mustard seeds 1/4 teaspoon Channa dal 1/2 teaspoon Groundnuts 1/4 teaspoon Cashew nuts 1/2 teaspoon Asafoetida a pinch Turmeric powder 1/4 teaspoon Green chillies 3 Coriander leaves Few Curry leaves Few Lime 1 ( Squeeze it and extract the juice) Salt As per taste Oil 3 tsp Method : Pressure […]

Create your website at WordPress.com
Get started