அக்குபிரஷர் அனுபவங்கள் – 2

முந்தைய பதிவின் தொடர்ச்சி தத்தளிப்பும் மீட்பும் சக்கரை மருத்துவரை பார்க்க காத்திருந்த நேரத்தில் பலவித சிந்தனைகள். கடைசியில் இந்த மருத்துவர் சொல்வதையே பின்பற்றி விடலாம் என்ற முடிவுக்கு வந்தேன். அவரோ சோதனை முடிவுகளை பார்த்து விட்டு “ஒன்று, நீங்கள் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளாமல் இருந்திருக்கவேண்டும், அல்லது அடிக்கடி உணவகங்களில் சாப்பிட்டிருக்க வேண்டும் அல்லது நான் பரிந்துரைத்த உணவுக்கட்டுப்பாட்டை பின்பற்றாது இருந்திருக்க வேண்டும்” என்றார். நான் இது மூன்றையுமே செய்திருந்ததால் பேசாமலிருந்தேன். இந்த அலோபதி சோதனைகளில் இன்னொரு விஷயம். உணவுக்கு […]

அக்குபிரஷர் அனுபவங்கள் – 1

முதல் தாக்குதல் கடந்த 2014ம் ஆண்டின் கோடைக்காலத்தில் வீடு மாற்றியதிலிருந்து எல்லாம் ஆரம்பித்தது. எனக்கு சிறு வயதிலிருந்து மூச்சிரைப்பு நோய் இருந்துவந்தது. அதாவது ஜலதோஷம் வந்தால் சளியாக மாறி மூச்சிரைப்பில் கொண்டுபோய் விடும். எனக்கு பதினைந்து வயதாகும்போது, அலோபதி மருத்துவமுறைகள் பயனளிக்காததால், ஹோமியோபதி மருந்துகளை எடுத்துக்கொள்ள ஆரம்பித்தேன். மூன்று மாதங்களில் முழுமையான தீர்வு கிடைத்தது. அதன்பிறகு பலமுறை சளி பிடித்தாலும் மூச்சிரைப்பு மட்டும் வந்ததேயில்லை. முப்பத்துமூன்றாம் வயதில் ஒருமுறை கழிவறையை அமிலம் வைத்து கழுவி விட முனைந்தபோது […]

சாலை விபத்துகளை தடுப்பது எப்படி? சில எண்ணங்கள்

பின்வரும் கட்டுரை சில மாதங்கள் முன்பு திரு என்.முருகன் (ஐ.ஏ.எஸ் ஓய்வு) அவர்களால் துக்ளக்கில் எழுதப்பட்டது. அது குறித்து சில எண்ணங்களை துக்ளக்கிற்கு நான் எழுதி அனுப்பினேன். ஆனால் அவர்கள் பிரசுரிக்கவில்லை 😦 பின்வரும் இணைப்பில் திரு. முருகன் அவர்களின் கட்டுரையை இலவசமாக படிக்கலாம். http://thuglak.com/thuglak/main.php?x=archive/22_07_2015/murugan_22_07_2015.php அதுகுறித்த என் எண்ணங்கள் பின்வருமாறு. திரு. முருகன் அவர்களின் கட்டுரையில் உள்ள பெரும்பாலான விஷயங்களுடன் நானும் உடன்படுகிறேன். அவர் தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள அதிகாலை பயண அனுபவங்களை நானும் பெற்றுள்ளேன். […]

புத்தாண்டு சபதங்கள்

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த வலைப்பூவையும் வலைதளத்தையும் ஆரம்பித்து ஏறத்தாழ இரண்டரை வருடங்களாகின்றன. அதிகபட்சமாக கடந்த இரு வருடங்களிலும் தலா ஏழு பதிவுகளை எழுதியுள்ளேன். இந்த வருடத்தில் இதை அதிகரிக்கவேண்டுமென்பதே என் முதல் குறிக்கோள். சராசரியாக வாரத்திற்கு ஒரு பதிவு என்ற வகையில் எழுதவேண்டுமென நினைக்கிறேன். ஏழிலிருந்து ஐம்பத்தியிரண்டு என்பது கொஞ்சம் அதீதம்தான். அதெல்லாம் பார்த்தால் நான் எப்போது ஜெயமோகனாவது? ஆகவே முடிந்தவரை முயற்சிக்கிறேன். அடுத்ததாக புத்தகங்கள். நிறைய புத்தகங்களை வாங்கி வீட்டில் அடுக்கிவைத்திருக்கிறேன். […]

சாலை விபத்துகளை தடுப்பது எப்படி? சில எண்ணங்கள்

பின்வரும் கட்டுரை சில மாதங்கள் முன்பு திரு என்.முருகன் (ஐ.ஏ.எஸ் ஓய்வு) அவர்களால் துக்ளக்கில் எழுதப்பட்டது. அது குறித்து சில எண்ணங்களை துக்ளக்கிற்கு நான் எழுதி அனுப்பினேன். ஆனால் அவர்கள் பிரசுரிக்கவில்லை பின்வரும் இணைப்பில் திரு. முருகன் அவர்களின் கட்டுரையை இலவசமாக படிக்கலாம். http://thuglak.com/thuglak/main.php?x=archive/22_07_2015/murugan_22_07_2015.php அதுகுறித்த என் எண்ணங்கள் பின்வருமாறு. திரு. முருகன் அவர்களின் கட்டுரையில் உள்ள பெரும்பாலான விஷயங்களுடன் நானும் உடன்படுகிறேன். அவர் தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள அதிகாலை பயண அனுபவங்களை நானும் பெற்றுள்ளேன். ஆட்டோக்களின் […]

Intolerance in India

சமீபத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் தனது இணையதளத்தில் சகிப்பின்மை விவகாரம் குறித்து எழுதிய கட்டுரையின் ஆங்கில மொழியாக்கம் எனக்கு வாட்ஸ்ஸாப்பில் வந்தது. மொழிபெயர்ப்பு செய்தவர் யாரென்று தெரியவில்லை. அவருக்கு நன்றி. An Eye opener B. Jeyamohan is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil This is the translation of his article:  “Intolerance”  I learnt the meaning of […]

ஒரு ஊர்ல…

ஒரு ஊர்ல ரெண்டு கிளி இருந்துதாம். ரெண்டும் சாப்பிட்டுட்டே இருந்துதாம். அந்த வயசுல ஒரு நாள்ல முப்பத்தஞ்சு வயசு இருந்ததாம். அந்த கிளி வந்து, எப்ப பாரு லயனையே தேடிப்போகுமாம். வேற எதுவுமே சாப்பிடாதாம். அந்த ரெண்டு கிளியுமே சொல்லிட்டுருந்துதாம், சேர்ந்து ஒரு ரைம்ஸ் சொல்லிட்டேயிருந்துதாம். (கொஞ்ச நேரம் யோசித்து) அது என்ன ரைம்ஸ்ன்னு தெரியல. நாளைக்கு சொல்றேன் ஓகேயா? அந்த ரைம்ஸ் என்னன்னு எனக்கு தெரியல எனக்கு இன்னைக்கு. அதுமாதிரி சொல்லிட்டேயிருந்துதாம். அப்பபார்த்தா, ஒரு லயன் […]

விகடனின் பொறுப்பற்ற போக்கு!

சமீபத்தில் சென்னை வெள்ளத்தில் மூழ்கியபோது சென்னை, நந்தம்பாக்கத்திலிருந்து போருர் சிக்னல் செல்லும்வழியிலுள்ள டி.எல்.எஃப் தகவல் தொழில்நுட்ப பூங்கா வளாகத்தைப் பற்றி பின்வரும் செய்தியை “டி.எல்.எஃப். ஐ.டி.வளாகத்தில் என்ன நடக்கிறது? – மறைக்கப்படும் மர்மம்!” என்ற தலைப்பில் அதன் இணையதளத்தில் வெளியிட்டிருந்தது.http://www.vikatan.com/news/tamilnadu/56139-what-happening-in-dlf-complex-hidden-mystery.artகொஞ்சம் விஷயமறிந்தவர்களுக்கு கூட கடும் எரிச்சலைக் கிளப்பக்கூடிய வகையில் அந்தக் கட்டுரை எழுதப்பட்டிருந்தது.நான் அந்த வளாகத்தில் செயல்படும் ஒரு நிறுவனத்தில்தான் வேலை பார்த்து வருகிறேன். இந்தச் செய்திவெளியிடப்படுவதற்கு இரண்டு நாட்கள் முன்பு (டிசம்பர் 7ம் தேதியன்று) நான் […]

கிருத்திகா–இந்திய நாட்காட்டி

அறிமுகம் இந்திய நாட்காட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ள பலவிதமான முக்கிய தினங்களை, விஷயங்களை நமக்கு நினைவு படுத்துவதற்காக செய்யப்பட்ட ஒரு எளிய, சிறிய முயற்சி இது. கீழே காணப்படும் தகவல்களை மாத நாட்காட்டிகளில் இருந்தும், பஞ்சாங்கங்களில் இருந்தும் எடுத்து அவற்றை ஒரு கூகிள் காலண்டரின் வழியாக பகிர்வதே இதன் நோக்கம். என்னென்ன விவரங்கள் இந்த நாட்காட்டியில் கிடைக்கின்றன? முக்கிய தினங்கள் (தலைவர்களின் பிறந்த நாள் / நினைவு நாள் முதலியன) அரசு விடுமுறை தினங்கள் ஹிந்து மதம் தொடர்பான விவரங்கள். […]

நியூஸ்ஹண்ட் மற்றும் மாக்ஸ்டர் செயலிகளில் “காலம் – ஜெயமோகன் சிறப்பிதழ்”

காலம் பத்திரிக்கையின் ஜூன் மாத இதழ், எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் சிறப்பிதழாக வந்துள்ளது. துரதிருஷ்டவசமாக இந்த பத்திரிக்கையைப் பற்றி இப்போதுதான் முதன்முதலில் கேள்விப்படுகிறேன். எழுத்தாளர் நாஞ்சில்நாடனின் பதிவுகளை சமீபகாலமாக தொடர்ந்து படித்து வருகிறேன். அவ்வகையில் இவ்விதழில் ஜெயமோகன் குறித்து அவர் எழுதியுள்ள கட்டுரையின் பகுதியை அவரது இணையதளத்தில் பதிந்திருந்ததார். அதை படித்தபோது, அவ்விதழ் நியூஸ்ஹண்ட் (newshunt) மற்றும் மாக்ஸ்டர் (magzter) செயலிகளில் கிடைக்கிறது என தெரியவந்தது. சரி, ஜெயமோகனுக்காக ரூ.75/- செலவழிக்கமாட்டோமா என்று நியூஸ்ஹண்ட்செயலிக்கு சென்றபோது, அங்கே […]

Create your website at WordPress.com
Get started