புத்தாண்டு சபதங்கள்

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த வலைப்பூவையும் வலைதளத்தையும் ஆரம்பித்து ஏறத்தாழ இரண்டரை வருடங்களாகின்றன. அதிகபட்சமாக கடந்த இரு வருடங்களிலும் தலா ஏழு பதிவுகளை எழுதியுள்ளேன். இந்த வருடத்தில் இதை அதிகரிக்கவேண்டுமென்பதே என் முதல் குறிக்கோள். சராசரியாக வாரத்திற்கு ஒரு பதிவு என்ற வகையில் எழுதவேண்டுமென நினைக்கிறேன். ஏழிலிருந்து ஐம்பத்தியிரண்டு என்பது கொஞ்சம் அதீதம்தான். அதெல்லாம் பார்த்தால் நான் எப்போது ஜெயமோகனாவது? ஆகவே முடிந்தவரை முயற்சிக்கிறேன்.

அடுத்ததாக புத்தகங்கள். நிறைய புத்தகங்களை வாங்கி வீட்டில் அடுக்கிவைத்திருக்கிறேன். ஆனால் படிப்பது என்னவோ மிகவும் குறைவுதான். சென்ற வருட இறுதியில் GoodReads இணையதளத்தின் புண்ணியத்தில் (reading challenge) நான்கு புத்தகங்களை படித்து முடித்தேன். இருப்பினும், நிறைய புத்தகங்கள் படிக்க வேண்டியிருக்கிறது. இவை தவிர என் தொழில் சார்ந்த புத்தகங்களையும் படிக்க வேண்டும். இப்போது உடனடியாக மனதில் தோன்றுபவற்றை கீழே கொடுத்துள்ளேன்.

உப்புவேலி – ராய் மாக்ஸம் (தமிழில் சிறில் அலெக்ஸ்)
இனி நான் உறங்கட்டும் – பி.கெ. பாலகிருஷ்ணன் (தமிழில் ஆ. மாதவன்) (இதை போன ஜனவரியில் சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கினேன். இன்னமும் படித்துக்கொண்டிருக்கிறேன்)
இரண்டாம் இடம் ( இனி நான் உறங்கட்டும் முடித்த பிறகுதான் இதை படிக்கவேண்டும் என்ற தீர்மானத்தில் இருப்பதால் இன்னமும் ஆரம்பிக்கவில்லை)
சத்தியசோதனை – காந்தி (பலகாலமாக படித்துக்கொண்டிருக்கும் புத்தகங்களில் இதுவும் ஒன்று. இந்த வருடமாவது முடிக்கவேண்டும்)
இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் – ஜெயமோகன்

மறுபடியும் படிக்க நினைப்பவை
நீலம், வண்ணக்கடல், விஷ்ணுபுரம் – ஜெயமோகன்

தொழில் சார்ந்த புத்தகங்கள்

Code complete – Steve McConnell (இரண்டு வருடங்களாக படிக்க முயன்று கொண்டிருக்கிறேன், இன்னமும் முடிக்கவில்லை)
Patterns of Enterprise application architecture – Martin Fowler
Refactoring – Martin Fowler (இன்னமும் வாங்கவில்லை. மேலே உள்ள இரு புத்தகங்களையும் முடித்தபின் வாங்கி படிக்கவேண்டும்)

இவை தவிர WCF தொடர்பாக வாங்கிவைத்த ஒரு புத்தகத்தையும், கிண்டில் கருவியில் சேர்த்து வைத்துள்ள சில புத்தகங்களையும் படிக்கவேண்டும். எவ்வளவு படிக்கிறேன் என்று பார்க்கலாம்.

புத்தகங்கள் தவிர Data science தொடர்பாக படிக்க முயன்றுகொண்டிருக்கிறேன். அதற்கு கணிதம் தொடர்பான புத்த்கங்களையும், Machine learning தொடர்பான புத்தகங்களையும் படிக்கவேண்டுமென்றிருப்பதால், இந்த வருடம் எனக்கு படிக்கும் வருடமாகவே இருக்கும் என்று தோன்றுகிறது.

சைக்கிள் பயணங்கள்

நான் வசிக்கும் சென்னையை சுற்றியுள்ள ஏரிகளுக்கு சைக்கிளிலேயே பயணித்து, புகைப்படங்கள் எடுத்து பதிவுகள் எழுதி அப்புகைப்படங்களை வெளியிடவேண்டும் என்று போன வருடம் நினைத்திருந்தேன். மாதம் ஒரு ஏரி என்று யோசித்து வைத்திருக்கிறேன். மழை பெய்து நீர் நிறைந்துள்ள இந்நிலையில் பயணம் நன்றாகவே இருக்குமென தோன்றுகிறது. வேடந்தாங்கலுக்கு ஒருமுறை குடும்பத்துடன் (காரில்தான்) சென்றுவரவேண்டும்.

சென்றவருடத்திலிருந்து என் உடலிலோ அல்லது மனதிலோ தோன்றும் பிரச்சனைகளுக்கு அக்குபிரஷர் மூலமாகத்தான் சிகிச்சை பெற்றுவருகிறேன். கம்பம் அக்காடமி நடத்தும் ஐந்துநாள் தொடுசிகிச்சை முகாமிற்கும் ஒருமுறை சென்றுவந்தேன். அடுத்த கட்டமாக அதில் ஒரு வருட டிப்ளமோ படிப்பை இந்த வருடம் ஜூன் மாதம் முதல் தொடங்கவுள்ளேன்.

கடைசியாக உணவில் கட்டுப்பாட்டை கொண்டுவரவேண்டுமென முடிவு செய்திருக்கிறேன். இதைப்பற்றி தனியாக ஒருபதிவு எழுதுகிறேன்.

இதெல்லாம் பார்த்துவிட்டு ஏதோ நான் நினைத்தால் முடிப்பவன் என்று எண்ணிவிடாதீர்கள். (என்னைப்பற்றி தெரிந்தவர்கள் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள்). பொதுவாக நான் எதையாவது செய்யவேண்டுமென்றால், அதை செய்துவிட்டு மற்றவர்களிடம் சொல்பவனல்ல. மற்றவர்களிடம் முதலில் சொல்லிவிட்டு, ஐயோ சொல்லிவிட்டோமே, அதற்காகவாவது எதையாவது செய்யவேண்டும் என்று செயலில் இறங்க முயற்சிப்பவன். இந்த பதிவும் அந்த வகையானதொரு முயற்சியே.

எல்லாம் நல்லபடியாக நடக்கவேண்டும் என….. என்னை எல்லோரும் வாழ்த்துங்கள்.

Join the Conversation

3 Comments

Leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Create your website at WordPress.com
Get started
%d bloggers like this: